/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்
/
மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்
ADDED : ஜூலை 01, 2024 11:32 PM
கோவை;குனியமுத்துார் மற்றும் கு.வடமதுரை மின் வாரிய அலுவலகங்களில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம், நாளை நடக்கிறது.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், குனியமுத்துார் அலுவலகத்தில், நாளை காலை, 11:00 மணிக்கு நடக்கும் கூட்டத்தில் மேற்பார்வை பொறியாளர்(கோவை, தெற்கு) சுப்ரமணியன் பங்கேற்கிறார்.
கு.வடமதுரை அலுவலகத்தில் காலை, 11:00 மணிக்கு நடக்கும் கூட்டத்தில். மேற்பார்வை பொறியாளர் (கோவை, வடக்கு) விஜயகவுரி பங்கேற்கிறார்.
இந்த மின் வாரிய அலுவலகங்களுக்கு உட்பட்ட மின் நுகர்வோர், கூட்டத்தில் பங்கேற்று, தங்கள் மின் இணைப்பு உள்ளிட்ட மின் வாரியம் தொடர்பான புகார்களை நேரில் தெரிவித்து பயனடையலாம்.
இத்தகவலை, செயற்பொறியாளர்கள் சுரேஷ்(குனியமுத்துார்), சண்முகசுந்தரம்(கு.வடமதுரை) தெரிவித்துள்ளனர்.