/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசு கல்லுாரியில் பொருளியல் மன்றம் துவக்கம்
/
அரசு கல்லுாரியில் பொருளியல் மன்றம் துவக்கம்
ADDED : மார் 01, 2025 05:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொண்டாமுத்தூர்; தொண்டாமுத்தூர் அரசு கலை அறிவியல் கல்லூரியின், பொருளியல் துறை சார்பில், மாணவர் மன்ற துவக்க விழா, நேற்று கல்லூரி அரங்கத்தில் நடந்தது.
இவ்விழாவில், துறைத்தலைவர் சிவச்சந்திரன் வரவேற்புரை ஏற்றினார். முதல்வர் சக்தி ஸ்ரீ தலைமை வகித்தார். இதில், பாரதியார் பல்கலையின் பொருளியல் துறை உதவி பேராசிரியர் கோவிந்தசாமி சிறப்பு விருந்தினராக பங்கேற்று, 'இந்தியாவின் வேளாண்மை பொருளாதாரம் 2025' என்ற தலைப்பில், இந்திய பொருளாதாரத்தில், வேளாண்மையின் பங்கு எவ்வளவு முக்கியத்துவம் வகிக்கிறது என்பது குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.