/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மகனை தேடி தவித்த தாய் சேர்த்து வைத்தது 'ஈரநெஞ்சம்'
/
மகனை தேடி தவித்த தாய் சேர்த்து வைத்தது 'ஈரநெஞ்சம்'
மகனை தேடி தவித்த தாய் சேர்த்து வைத்தது 'ஈரநெஞ்சம்'
மகனை தேடி தவித்த தாய் சேர்த்து வைத்தது 'ஈரநெஞ்சம்'
ADDED : ஜூலை 17, 2024 09:57 PM

கோவை:கோவை அரசு மருத்துவமனை சுற்றுப்பகுதியில், 65 வயது மதிக்கத்தக்க மூதாட்டி, மழை, வெயிலில் பரிதவிப்பதாக, ஈரநெஞ்சம் அறக்கட்டளைக்கு கடந்த, 12ம் தேதி தகவல் கிடைத்தது. போலீசார் உதவியுடன் மூதாட்டி மீட்கப்பட்டு, மாநகராட்சி முதியோர் காப்பகத்தில் அனுமதிக்கப்பட்டார்.
புதுக்கோட்டை, இலுப்பூர் தாலுகா, நிலையப்பட்டியை சேர்ந்த இவர், தன் பெயர் வசந்தா,65, என்றும், மகன் பாண்டித்துரை கோவையில் வேலை செய்து வருவதாகவும், மகள் பாண்டிசெல்வி புதுக்கோட்டையில் வசிப்பதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து, போலீசார் உதவியுடன் வசந்தாவின் உறவினரை தேடும் பணியை மேற்கொண்ட ஈரநெஞ்சம் அறக்கட்டளையினர், மறுநாள் கோவையில் உள்ள மகனிடம் ஒப்படைத்தனர்.
ஈரநெஞ்சம் அறக்கட்டளை நிர்வாகி மகேந்திரன் கூறுகையில், ''அவரது மகள் பாண்டி செல்வி மூலம், மகன் பாண்டித்துரைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, 13ம் தேதி, அவரிடம் வசந்தா ஒப்படைக்கப்பட்டார்,'' என்றார்.