/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஒவ்வொரு சொட்டும் முக்கியம்! மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தல்
/
ஒவ்வொரு சொட்டும் முக்கியம்! மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தல்
ஒவ்வொரு சொட்டும் முக்கியம்! மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தல்
ஒவ்வொரு சொட்டும் முக்கியம்! மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தல்
ADDED : ஏப் 11, 2024 06:45 AM
கோவை : அணைப்பகுதிகளில் மழை இல்லாத சூழலில், பொது மக்கள் குடிநீரை வீணாக்காமல் சிக்கனமாக பயன்படுத்துமாறு, மாநகராட்சி நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
கோவை மாநகராட்சி, 257.04 சதுர கி.மீ., பரப்பளவுடன், 22.88 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகையை கொண்டுள்ளது.
மாநகரின் மொத்த குடிநீர் தேவை, 30.8 கோடி லிட்டர் உள்ள நிலையில் சிறுவாணி, பில்லுார் அணை மற்றும் ஆழியாறு ஆகியவற்றில், தினமும் குடிநீர் எடுக்கப்படுகிறது.
தற்போது, கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு தினமும், 6 கோடி லிட்டர் வரை ஏற்பட்டுள்ளது. குடிநீர் அல்லாத பயன்பாட்டுக்கு 2,649 போர்வெல்கள் வாயிலாக, 4 கோடி லிட்டர் தண்ணீர் எடுத்து வினியோகிக்கப்படுவதாக, மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள இச்சூழலில், கோவை மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் உள்ளிட்டோர் பவானி ஆற்றில் நீர் இருப்பு குறித்து, சமீபத்தில் ஆய்வு செய்தனர். தமிழ்நாடு குடிநீர் வாரியம் மற்றும் மின் உற்பத்தி பகிர்மான கழக பொறியாளர்களுடன், ஆலோசனை நடத்தினர்.
குடிநீர் பற்றாக்குறையால், குடிநீர் வினியோக இடைவெளி, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பாதிப்புகளை தவிர்க்க போர்வெல்கள் அதிகரிப்பு, பராமரிப்பு, தண்ணீர் லாரிகள் என மாற்று நடவடிக்கைகளையும், மாநகராட்சி எடுத்து வருகிறது.
மழையை மட்டுமே எதிர்பார்த்துள்ள சூழலில், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்தினால் மட்டுமே, பெரியளவில் பாதிப்புகளை தவிர்க்க முடியும் என்பதை, மக்களும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:
சிறுவாணி அணையில் மழை இல்லாததால் தற்போது, 15.5 அடிக்கும் குறைவாகவே நீர் மட்டம் உள்ளது. இதனை ஜூன் வரை வினியோகிக்க தினமும், 3.8 கோடி லிட்டர் மட்டுமே எடுக்கப்படுகிறது. பவானி ஆற்றுப்பகுதிகளிலும் மழை இல்லை.
மின் உற்பத்தி பகிர்மான கழக அதிகாரிகளுடன், பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து, பவானி ஆறு மற்றும் அதில் உள்ள அணைகள் வாயிலாக நீர் மின் திட்டம் இயக்கி, 20 மில்லியன் கன அடி தண்ணீர் விடுவிக்கப்படுகிறது.
குடிநீர் தேவையுள்ள இடங்களில், லாரிகள் வாயிலாகவும் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. குடிநீர் வினியோக பணிகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. பொது மக்களும், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்தி, ஒத்துழைப்பு தர வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.

