ADDED : ஜூலை 19, 2026 09:42 PM
வெள்ளலூர்: வெள்ளலூர் தேனீஸ்வரர் கோவில் அருகே தொல்லியல் துறை சார்பில், அகழாய்வு பணி நடந்து வருகிறது. இதில், சங்கு வளையல்கள், மணிகள், கண்ணாடி வளையல்கள் மற்றும் மணிகள், சுடுமண் மணிகள், காதணிகள், கழுதணிகள், சுடு மண் பொம்மை, விளையாட்டு சில்லுகள், சுடுமண் ஆட்டக்காய்கள், நூல் நூற்க பயன்படுத்தப்படும் தக்களிகள், இரும்பு கருவிகள் மற்றும் பொருட்கள், செம்பினாலான நாணயங்கள், ஆபரணங்கள், கற்களால் ஆன அம்மி, குழவி, தரையை மெருகேற்ற பயன்படும் தேய்ப்பான், மண் பாண்டங்கள், கட்டுமானங்கள், செங்கற்களினாலான நீரோடும் வாய்க்கால், சுடுமண் குழாய் என இதுவரை, 900க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இவை நேற்று மக்கள் பார்வைக்கு காட்சிப்படுத்தப்பட்டன. நூற்றுக்கணக்கானோர் பார்வையிட்டு சென்றனர்.
தொல்லியல் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘இங்கு கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. செப்.,இப்பணி நடக்கும். இது குறித்த விபரங்கள் ஆவணப்படுத்தப்பட்டு, அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படும்’ என்றார்.
