sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கோவை ரயில்வே கட்டமைப்பு தொழில் அமைப்புகளின் எதிர்பார்ப்பு! பட்ஜெட் கூட்டத்தொடரில் வருமா நிதி ஒதுக்கீடு அறிவிப்பு?

/

கோவை ரயில்வே கட்டமைப்பு தொழில் அமைப்புகளின் எதிர்பார்ப்பு! பட்ஜெட் கூட்டத்தொடரில் வருமா நிதி ஒதுக்கீடு அறிவிப்பு?

கோவை ரயில்வே கட்டமைப்பு தொழில் அமைப்புகளின் எதிர்பார்ப்பு! பட்ஜெட் கூட்டத்தொடரில் வருமா நிதி ஒதுக்கீடு அறிவிப்பு?

கோவை ரயில்வே கட்டமைப்பு தொழில் அமைப்புகளின் எதிர்பார்ப்பு! பட்ஜெட் கூட்டத்தொடரில் வருமா நிதி ஒதுக்கீடு அறிவிப்பு?


ADDED : ஜூலை 25, 2024 11:33 PM

Google News

ADDED : ஜூலை 25, 2024 11:33 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை : மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்படாவிட்டாலும், இந்த கூட்டத்தொடரில் கோவைக்கான ரயில்வே கட்டமைப்புகள் சார்ந்த 10 கோரிக்கைகளை தொழில்துறையினர் எதிர்பார்க்கின்றனர்.

கோவைக்கான ரயில்வே கட்டமைப்பு மற்றும் கூடுதல் ரயில்கள் குறித்து, இங்குள்ள தொழில் அமைப்புகள், தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

இதற்காக பல்வேறு தொழில் அமைப்புகளும் இணைந்து 'கோயம்புத்துார் நெக்ஸ்ட்' என்ற அமைப்பையும் துவக்கி, மத்திய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளைச் சந்தித்து, இந்த கோரிக்கைகளுக்காக மனுப்போர் நடத்திக் கொண்டிருக்கின்றன.

மத்திய பட்ஜெட்டில் கோவை ரயில்வே சந்திப்பு மேம்பாட்டுக்கு அறிவிப்பு வருமென்று பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அது குறித்து எந்த அறிவிப்பு வெளியாகவில்லை. இந்நிலையில் இந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் சில அறிவிப்புகள் வெளியாகுமென்று, தொழில்துறையினர் எதிர்பார்க்கின்றனர்.

இதில் ரயில்வே கட்டமைப்பு தொடர்பாக 10 கோரிக்கைகளை, தொழில் அமைப்புகள் மத்திய ரயில்வே அமைச்சகத்திடம் முன் வைத்துள்ளன. அதில் கோவை ரயில்வே சந்திப்பை, ஏற்கனவே பரிந்துரைக்கப்பட்டுள்ள திட்டத்தின்படி, ரூ. 800 கோடி மதிப்பில் விரிவாக்கம் செய்து மேம்படுத்த வேண்டுமென்ற கோரிக்கை, முதலில் இடம் பெற்றுள்ளது.

அடுத்ததாக கோவை வடக்கு ரயில்வே ஸ்டேஷனில், கூடுதல் நடைமேடைகள் அமைத்து, சரக்கு கையாளும் பகுதியை மாற்றி, கூடுதல் ரயில்களை நிறுத்தவும், புறப்படும் வகையில் மேற்குப் பகுதியில் புதிய நுழைவாயில் அமைக்க வேண்டுமென்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

இவற்றைத் தவிர்த்து, கோவை சந்திப்பில் யார்டு மறு வடிவமைப்பு செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 10 கோரிக்கைகளை தொழில் அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.

இந்த திட்டகளுக்கு நடப்பு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தால், அவற்றின் விபரத்தைத் தெரியப்படுத்துமாறு, தெற்கு ரயில்வே அதிகாரிகளிடம் தொழில் அமைப்புகள் கோரியுள்ளன. எல்லா கோரிக்கைகளும் நிறைவேற்றப்படாவிட்டாலும் ஒன்றிரண்டு அறிவிப்பாவது வெளியாகுமென்பதே இவர்களின் நம்பிக்கை.






      Dinamalar
      Follow us