/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவை அரசு கலை கல்லுாரிக்கு தன்னாட்சி அதிகாரம் நீட்டிப்பு
/
கோவை அரசு கலை கல்லுாரிக்கு தன்னாட்சி அதிகாரம் நீட்டிப்பு
கோவை அரசு கலை கல்லுாரிக்கு தன்னாட்சி அதிகாரம் நீட்டிப்பு
கோவை அரசு கலை கல்லுாரிக்கு தன்னாட்சி அதிகாரம் நீட்டிப்பு
ADDED : ஆக 30, 2024 10:35 PM

கோவை;கோவை அரசு கலைக் கல்லுாரிக்கான தன்னாட்சி அதிகாரத்தை, 2027ம் ஆண்டு வரை நீட்டித்து பல்கலை மானியக்குழு ஆணை பிறப்பித்துள்ளது.
கோவை அரசு கலைக்கல்லுாரியானது, 1852ம் ஆண்டு தொடங்கப்பட்டது. பாரதியார் பல்கலையுடன் இணைவு பெற்ற இக்கல்லுாரி கடந்த, 1987ம் ஆண்டு முதல் தன்னாட்சி அதிகாரம் பெற்று இயங்கி வருகிறது.
கல்லுாரிகளுக்கு வழங்கப்படும் தன்னாட்சி அதிகாரம் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை பல்கலை மானியக் குழுவால் நீட்டிக்கப்படும். கோவை அரசு கலைக் கல்லுாரியின் தன்னாட்சி அதிகாரம் கடந்த, 2023ம் கல்வியாண்டில் முடிவுற்றது.
இந்நிலையில், தன்னாட்சி நீட்டிப்பு வேண்டி பல்கலை மானியக் குழுவிடம் உரிய வழிமுறைகளை பின்பற்றி கல்லுாரி நிர்வாகம் தரப்பில் விண்ணப்பிக்கப்பட்டது. கல்லுாரியில் ஆய்வு செய்த பல்கலை மானியக்குழு 2027ம் ஆண்டு வரை நீட்டித்து ஆணையிட்டுள்ளது.
தன்னாட்சி அதிகாரம் நீட்டிப்பு ஆணை பெறப்பட்டதை தொடர்ந்து தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் செல்வராஜ், பேராசிரியர்கள் உள்ளிட்டோர் முதல்வர் எழிலிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.