/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
லாரி டிரைவரிடம் பணம் பறிப்பு; நால்வருக்கு வலை
/
லாரி டிரைவரிடம் பணம் பறிப்பு; நால்வருக்கு வலை
ADDED : மே 25, 2024 06:08 AM
போத்தனுார் : லாரி டிரைவரை கத்தியை காட்டி மிரட்டி, 30 ஆயிரம் ரொக்கம் பறித்து தப்பிய நான்கு பேரை போலீசார் தேடுகின்றனர்.
க.க.சாவடி அடுத்து நவக்கரை நந்தி கோவில் பாலம் அருகே, ஒரு லாரி கோவை நோக்கி வந்துகொண்டிருந்தது. லாரியை மேட்டுப்பாளையத்தை சேர்ந்த பிரபு, 38 ஓட்டி வந்தார்.
அப்போது ஒருவர் டார்ச் லைட் அடித்து லாரியை நிறுத்த சொன்னார். பின், அங்கு வந்த நான்கு பேர் கும்பல், கத்தியை காட்டி, பணம் தருமாறு மிரட்டியுள்ளனர்.
பிரபு லாரியில், 30 ஆயிரம் ரூபாய் ரொக்கம் இருப்பதாக கூறியுள்ளார். கும்பலில் ஒருவர் பணத்தை எடுத்து வந்துள்ளார். இதையடுத்து, பிரபுவை அக்கும்பல் விடுவித்துள்ளது.
இது குறித்து பிரபு க.க.சாவடி போலீசில் புகார் அளித்தார். போலீசார் நான்கு பேர் கும்பலை தேடுகின்றனர்.

