/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'மண் நிறைத்தலில்' கவனம் இல்லையேல் குறைகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்
/
'மண் நிறைத்தலில்' கவனம் இல்லையேல் குறைகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்
'மண் நிறைத்தலில்' கவனம் இல்லையேல் குறைகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்
'மண் நிறைத்தலில்' கவனம் இல்லையேல் குறைகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்
ADDED : செப் 07, 2024 02:05 AM

சீராக மண்ணாய்வு செய்து கட்டப்படும் கட்டடங்களின் சுவர்களில் சேதப்படுவதற்கான வாய்ப்பு மிக குறைவு. அஸ்திவாரம் அல்லது அடித்தளம் அமைத்த பிறகு, அந்த குழியை மூடுவதற்கான வேலையை ஆரம்பிக்க வேண்டும்.
அவ்வாறு குழியை மூடும்பொழுது(பின் நிறைத்தல்) சில குறைபாடுகள் ஏற்படும் வாய்ப்புகள் உண்டு. அந்த குறைபாட்டால் கட்டுமானம் சேதாரம் அடையவும் வாய்ப்பு உள்ளது.
அஸ்திவாரத்தின் தன்மையானது, மனையின் மண் தரம் மற்றும் நிரப்பப்படும் மண்ணின் தரத்தை பொறுத்தே அமைகிறது.
பில்டர்ஸ் அசோசியேசன் ஆப் இந்தியா(கோவை மையம்) முன்னாள் தலைவர் சரவணன் கூறியதாவது:
கட்டடத்தின் அஸ்திவாரம் அமைப்பதற்கு, வெட்டப்பட்ட குழியை கிராவல் மணல் கொண்டு நிரப்புவார்கள்; இதற்கு பெயர்தான் 'பின் நிறைத்தல்'. அஸ்திவாரத்தில் பின் மணல் நிறைத்தலின்போது, கவனிக்கப்பட வேண்டிய விஷயங்கள் உள்ளன.
அதன்படி, அங்கு அடித்தள சுவர் ஏதேனும் இருந்தால், அதனை பழுதடையாமல் பாதுகாக்க வேண்டும். சரியான மண் வகையை பயன்படுத்தி, அங்கு பின் நிறைத்தல் செய்ய வேண்டும். நிரப்பிய மண்ணை நன்றாக இறுக்க வேண்டும். அடித்தளத்திற்குள் மழை நீர் போகாமல் சரியான வடிகால் அமைப்பது ஒரு சிறந்த வழியாகும்.
இந்த விஷயங்களை மனதில் கொண்டு, நாம் பணிகள் செய்தால் கட்டடத்திற்கு எந்தவிதமான பாதிப்பு இல்லாமல் பார்த்துக்கொள்ளலாம். பின் மண் நிரப்பும் இடத்திலிருந்து புல் மற்றும் தாவரங்கள் போன்றவற்றை அகற்றி, சுத்தமான தரைதளமாக அமைக்க வேண்டும்.
நாம் குழி எடுக்கும்போது, வந்த மண் நன்றாக இருந்தால் அதையே நிரப்புவதற்கும் பயன்படுத்தலாம். மூலையில் இருந்து நிறைக்க ஆரம்பித்து, சமமான அளவு தடிமனுடன், 1 அடி இருக்குமாறு நிரப்பி சமதளமாக்க வேண்டும்.
அங்கு நீரை ஊற்றி நிரப்ப வேண்டும். அதன்பின், 1 அடி நிரப்பிய மண் கலவையை 'காம்பேக்டர்' அல்லது 'ரோலர்' பயன்படுத்தி, 25 செ.மீ., அல்லது 20 செ.மீ., உயரத்திற்கு இறுக்க வேண்டும். பின்னர் ரோலரை பயன்படுத்தி முடியும் வரை இறுக்க வேண்டும். தடிமன் ஆறு இன்ச் வரை இறுக்க வேண்டும். இதை அடுக்கு அடுக்காக அமைக்க வேண்டும்.
ஒவ்வொரு ஆறு இன்ச் அளவு அடுக்கிற்கு நீர் விட்டு, கனமான காம்பேக்டர் பயன்படுத்தி இறுக்க வேண்டும். எக்காரணத்தை கொண்டும் களி மண்ணை பயன்படுத்தக்கூடாது.
இந்த முறை, கட்டுமானத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இதை முறையாக செய்யாவிட்டால் பல இடர்பாடுகள் உருவாகும். இதனால், நீர்க்கசிவு இல்லாத, சிறந்த அஸ்திவாரத்தை அமைக்கலாம்.
இவ்வாறு, அவர் கூறினார்.

