/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆண்களுக்கு இன்று குடும்பநல அறுவை சிகிச்சை முகாம்
/
ஆண்களுக்கு இன்று குடும்பநல அறுவை சிகிச்சை முகாம்
ADDED : ஜூலை 29, 2024 03:30 AM
கோவை;கோவை மாவட்ட குடும்பநல துணை இயக்குனர் கவுரி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
கோவை மாவட்டத்தில் நாளை (இன்று) சூலுார் அரசு மருத்துவமனையில் ஆண்களுக்கான நவீன தழும்பில்லாத குடும்பநல அறுவை சிகிச்சை சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இச்சிகிச்சை, பயிற்சி பெற்ற சிறந்த மருத்துவ நிபுணர்களை கொண்டு, ஐந்தே நிமிடங்களில் இலவசமாக செய்யப்படுகிறது.
கத்தியின்றி, ரத்தமின்றி, பக்கவிளைவுகளுமின்றி செய்யப்படும். இச்சிகிச்சையினை ஏற்றுகொள்ளும் ஆண்களுக்கு, அரசு ஊக்கதொகையாக ரூ.1,100 மற்றும் கோவை மாநகராட்சி வழங்கும் ஊக்கதொகை ரூ.1000, ஸ்ரீதேவி டெக்ஸ்டைல்ஸ் வழங்கும் ஊக்கதொகை ரூ.1000 என மொத்தம், ரூ.3,100 வழங்கப்படும்.
இச்சிகிச்சையினை ஏற்பதால், இல்லற வாழ்க்கையில் மகிழ்ச்சிக்கோ, கடின உழைப்பிற்கோ தடையேதுமில்லை. பெண்களுக்கு செய்யப்படும் குடும்பநல அறுவை சிகிச்சையினை விட பன்மடங்கு எளிமையானது. மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறவேண்டிய அவசியமில்லை.
விவரங்களுக்கு, 80728 65541 என்ற எண்ணில் தொடர்புகொண்டு தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.