/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விவசாயி அஸ்தியுடன் கோவையில் தங்கியிருந்த விவசாயிகள் கைது
/
விவசாயி அஸ்தியுடன் கோவையில் தங்கியிருந்த விவசாயிகள் கைது
விவசாயி அஸ்தியுடன் கோவையில் தங்கியிருந்த விவசாயிகள் கைது
விவசாயி அஸ்தியுடன் கோவையில் தங்கியிருந்த விவசாயிகள் கைது
ADDED : ஏப் 08, 2024 12:14 AM
கோவை;கோவையில் முகாமிட்டு இருந்த விவசாயிகள், 10 பேரை போலீசார் கைது செய்தனர்.
டில்லியில் விவசாயிகள் போராட்டத்தை முன்னெடுத்த அமைப்பு,கிஷான் மஸ்துார் மோட்சா. இந்த அமைப்பின் சார்பில், ஹரியானா மாநிலத்தில் விவசாயிகள் கைது செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்று நாடு முழுவதும் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது.
போராட்டத்தின் ஒருபகுதியாக, பிரதமர் மோடி மற்றும் ஹரியானா மாநிலத்தின் முதல்வர் நயாப் சிங் சைனி ஆகியோரின் உருவ பொம்மைகளை எரிக்கவும் திட்டமிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்த அமைப்பின் தலைவர் சர்வன் சிங் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள், கோவையில் முகாமிட்டிருந்தனர். அவர்கள் நேற்று மாலை, பிரதமர் மோடி மற்றும் ஹரியானா முதல்வர் ஆகியோரது உருவ பொம்மைகளை எரிக்க திட்டமிட்டிருந்தனர்.
இந்த தகவல் அறிந்த போலீசார், அவர்கள் தங்கியிருந்த ஓட்டலுக்கு சென்றனர். கைது செய்ய முயன்றபோது, வாக்குவாதம் ஏற்பட்டது.
போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, கிசான் மஸ்துார் மோட்சா விவசாயிகள் சங்கத்தின் தலைவர் சர்வன் சிங் உட்பட, வடமாநில விவசாயிகள், 10 பேரை கைது செய்தனர்.
இவர்கள், விவசாயிகள் போராட்டத்தின் போது, துப்பாக்கிச் சூட்டில் பலியான விவசாயியின் அஸ்தியுடன், நாடு முழுவதும் சுற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

