/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குழந்தையை கொளுத்த முயன்ற தந்தை கைது
/
குழந்தையை கொளுத்த முயன்ற தந்தை கைது
ADDED : மே 24, 2024 10:25 PM
கோவை:கோவை சாய்பாபா காலனி அண்ணா நகரில் வசிப்பவர் பச்சையன், 39; கூலி தொழிலாளி. இவரது மனைவி ஆர்த்தி. இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. பச்சையன் அடிக்கடி குடித்து விட்டு போதையில் தன் மனைவியிடம், தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். ஆர்த்தி கோபித்துக்கொண்டு, மதுரையில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். குழந்தையை அழைத்து செல்லவில்லை.
நேற்று முன்தினம் பச்சையன், மனைவியை போனில் தொடர்பு கொண்டு கோவைக்கு அழைத்தார். அதற்கு அவர் மறுத்ததாக தெரிகிறது. ஆத்திரமடைந்த பச்சையன், குழந்தை மீது கெரசின் ஊற்றி கொளுத்தி விடுவதாக மிரட்டல் விடுத்தார். ஆர்த்தி சாய்பாபா காலனியில் வசிக்கும் தன் உறவினரிடம் தெரிவித்துள்ளார்.
ஆர்த்தியின் உறவினர் பொன்னி, 50, வேறு சிலருடன் பச்சையன் வீட்டுக்கு சென்று குழந்தையை மீட்டனர். பொன்னி புகாரின் படி, சாய்பாபா காலனி போலீசார் வழக்குப்பதிந்து பச்சையனை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

