/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மயானக்கூரையில் சிறுத்தை பதுங்குவதால் அச்சம்
/
மயானக்கூரையில் சிறுத்தை பதுங்குவதால் அச்சம்
ADDED : ஆக 23, 2024 12:49 AM
வால்பாறை;வால்பாறை மயானத்தில் வளர்ந்துள்ள புதரில், சிறுத்தை பதுங்குவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
வால்பாறை நகராட்சி சார்பில், கடந்த, 11 ஆண்டுகளுக்கு முன் நடுமலை எஸ்டேட் பகுதியில், நகராட்சி சார்பில் மயானக்கூரை கட்டப்பட்டுள்ளது. இறந்தவர்களின் சடலத்தை அடக்கம் செய்ய செல்லும் மக்கள், ஓய்வெடுக்க வசதியாக நகராட்சி சார்பில் பல ஆண்டுகளுக்கு முன் மயானக்கூரை கட்டப்பட்டது.
இந்நிலையில், மயானக்கூரை தற்போது இடிந்து விழும் நிலையில் உள்ளதோடு, சுற்றிலும் புதர் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால், பகல் நேரத்திலேயே மயானக்கூரையில் சிறுத்தை பதுங்கியிருப்பதால், மக்கள் அச்சப்படுகின்றனர்.
புதர் சூழ்ந்து காணப்படும் மயானக்கூரையை பயன்படுத்த முடியாமல், நின்று கொண்டே இருக்க வேண்டிய பரிதாப நிலை உள்ளது. நகராட்சி சார்பில், இடியும் நிலையில் உள்ள, மயானக்கூரையை அகற்றி, புதியதாக கட்டித்தர வேண்டும், புதரை அகற்றி சிறுத்தை அச்சத்தில் இருந்து பாதுகாக்க வேண்டும், என, மக்கள் வலியறுத்தியுள்ளனர்.