/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மேம்பாலத்தில் 'பறக்கும்' பஸ்கள்
/
மேம்பாலத்தில் 'பறக்கும்' பஸ்கள்
ADDED : மே 22, 2024 01:10 AM
கோவை:கோவை - -பொள்ளாச்சி ரோட்டில், அரசு பஸ்கள் சில சமயங்களில் கீழே உள்ள நிறுத்தங்களுக்குச் செல்லாமல், மேம்பாலத்தில் ஏறி கடந்து சென்று விடுவதாக புகார் எழுந்தது.
இதனால், பஸ்சுக்காக காத்திருக்கும் பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர். பஸ்களை மேம்பாலத்தில் செல்லாமல், அணுகுசாலையைப் பயன்படுத்தி, பஸ் நிறுத்தத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில், சமீபத்தில் செக்கிங் இன்ஸ்பெக்டர்கள் திடீர் ஆய்வு நடத்தினர். ஒண்டிப்புதூர் மேம்பாலத்தின் மீது நின்று, அவ்வழியாக சென்ற அரசு பஸ்களை கண்காணித்தனர். அப்போது, கோவையில் இருந்து பழநி நோக்கி சென்ற அரசு பஸ், அணுகுசாலையைப் பயன்படுத்தாமல், மேம்பாலத்தில் ஏறிச் சென்றது. அதைத்தடுத்து நிறுத்திய அதிகாரிகள், டிரைவர், கண்டக்டருக்கு எச்சரிக்கை விடுத்தனர்.
மேம்பாலத்தைப் பயன்படுத்தக்கூடாது எனவும், அணுகுசாலையைக் கட்டாயம் பயன்படுத்தி, கீழே உள்ள பயணிகளையும் ஏற்றிச் செல்ல வேண்டும். மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்து அனுப்பினர்.

