/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பள்ளி மாணவர்களுக்கு மடிப்பு நுண்ணோக்கி பயிற்சி
/
பள்ளி மாணவர்களுக்கு மடிப்பு நுண்ணோக்கி பயிற்சி
ADDED : ஜூலை 03, 2024 12:22 AM

கோவை;அரசூர் கே.பி.ஆர்., பொறியியல் கல்லுாரியின், ஐ.இ.இ.இ., மாணவர் கிளை மற்றும் இளைஞர்கள் வல்லுனர் அமைப்பு, பொறியியல் பெண்கள் அமைப்பு சார்பில், மடிப்பு நுண்ணோக்கி பயிற்சி பட்டறை நிகழ்ச்சி நடந்தது.
அரசூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த நிகழ்வில், காகித தாள்கள், லென்ஸ்கள் போன்ற விலை குறைவான எளிய பொருட்களை, எவ்வாறு நுண்ணோக்கியாக பயன்படுத்துவது என்பது குறித்து, மாணவர்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டது. பயிற்சியாளர்கள் சாய் பிரசாந்த், சோனி லிங்கோலோ ஆகியோர் 120க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பயிற்சியளித்தனர். மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தையும், புதுமை உணர்வையும் துாண்டும் வகையில், இந்த நிகழ்வு நடத்தப்பட்டது.