/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
முன் உதாரணமாக ஒரு ரேஷன்கடை சுவர்களுக்கு வர்ணம் பூசி அசத்தல்
/
முன் உதாரணமாக ஒரு ரேஷன்கடை சுவர்களுக்கு வர்ணம் பூசி அசத்தல்
முன் உதாரணமாக ஒரு ரேஷன்கடை சுவர்களுக்கு வர்ணம் பூசி அசத்தல்
முன் உதாரணமாக ஒரு ரேஷன்கடை சுவர்களுக்கு வர்ணம் பூசி அசத்தல்
ADDED : மார் 02, 2025 11:39 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே ரேஷன்கடையில் வர்ணம் பூசி வண்ணமயமாக காணப்படுகிறது.
பொள்ளாச்சி அருகே உள்ள ஆலாம்பாளையம் ரேஷன் கடையில், அதிகபட்சமாக, 688 கார்டுதாரர்கள் உள்ளனர். இங்குள்ள, மக்களுக்கு, தடையின்றி ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டும் வருகின்றன.
அவ்வகையில், இந்த ரேஷன் கடை, முறையாக சுத்தம் செய்யப்பட்டும், சுவர்களுக்கும் வர்ணம் பூசியும் தனியார் சூப்பர் மார்க்கெட்டுக்கு இணையாக உள்ளது.
பெயர் பலகை, குறைகளை தெரிவிக்க புகார் பெட்டி, குடிநீர், துறை அதிகாரிகளின் தொடர்பு எண்கள் இடம் பெற்றுள்ளன.
ரேஷன் பொருட்கள் மட்டுமின்றி, கூட்டுறவுத்துறையின் வாயிலாக தயாரிக்கப்படும் எண்ணெய், காதி கிராப்ட் சோப்பு, சந்தனம், கொல்லிமலை மிளகு, கடுகு, அரசு உப்பு உள்ளிட்ட மளிகை பொருட்கள், கார்டுதாரர்கள் கேட்டு வாங்கிச்செல்லும் வகையில், அடுக்கி வைத்து விற்பனை செய்கின்றனர்.
அவ்வப்போது, குறிப்பிட்ட நேரத்திற்கு ஒருமுறை, கடை சுத்தம் செய்யப்படுகிறது. மற்ற ரேஷன் கடைகள் போல இல்லாமல், சேவை மையமாக உள்ளது. பொருட்களும் சுத்தமாக வைக்கப்பட்டுள்ளன.