/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரயில்வே நிர்வாகத்தின் கனிவான கவனத்துக்கு! 3 ரயில்கள் நிற்கணும்; 2 ரயில்களை நீட்டிக்கணும்
/
ரயில்வே நிர்வாகத்தின் கனிவான கவனத்துக்கு! 3 ரயில்கள் நிற்கணும்; 2 ரயில்களை நீட்டிக்கணும்
ரயில்வே நிர்வாகத்தின் கனிவான கவனத்துக்கு! 3 ரயில்கள் நிற்கணும்; 2 ரயில்களை நீட்டிக்கணும்
ரயில்வே நிர்வாகத்தின் கனிவான கவனத்துக்கு! 3 ரயில்கள் நிற்கணும்; 2 ரயில்களை நீட்டிக்கணும்
ADDED : செப் 03, 2024 11:08 PM
கோவை;கோவை பயணிகள் பயன்பெறும் வகையில், மூன்று ரயில்கள் போத்தனூரில் நின்று செல்லவும், இரு ரயில்கள் மதுரை மற்றும் சிதம்பரம் வரை நீட்டிக்கப்படவும் வேண்டும் என, போத்தனூர் ரயில் பயணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக, அச்சங்கம் சார்பில் சேலம் கோட்ட ரயில்வே மேலாளருக்கு அனுப்பப்பட்டுள்ள கோரிக்கை மனு:
கோவை, போத்தனூர் சுற்றுப்பகுதி மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, கோவை- மங்களூரு இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் (எண்: (22610/22609), எர்ணாகுளம்-பெங்களூரு இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் (எண்: 12678/12677), எர்ணாகுளம்-காரைக்கால் எக்ஸ்பிரஸ் (எண்: 16188/16187) ஆகிய இந்த மூன்று ரயில்களும், போத்தனூரில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மதுரைக்கு நீட்டிக்கணும்
மன்னார்குடி-கோவை இடையே இயக்கப்படும் செம்மொழி எக்ஸ்பிரஸ் ரயிலை (எண்: 16615/16616) மதுரை வரை நீட்டித்தால், காலை வேளைகளில் பழநி, திண்டுக்கல், மதுரை வரை செல்லும் கோவை மக்களுக்கு, வசதியாக இருக்கும்.
இதற்கு முன், தூத்துக்குடி விரைவு பாசஞ்சர் ரயில் இந்தத் தேவையைப் பூர்த்தி செய்து வந்தது. தற்போது தூத்துக்குடி அதிவிரைவு ரயில், மீண்டும் சேவைக்கு துவக்கப்படாத நிலையில், செம்மொழி எக்ஸ்பிரஸ் ரயிலை மதுரை வரை நீட்டித்தால், கோவை மக்களுக்கு உதவியாக இருக்கும். தூத்துக்குடி பாசஞ்சர் ரயில் சேவையை மீண்டும் துவக்க வேண்டும்.
சிதம்பரத்துக்கு நீட்டிக்கணும்
கோவை-மயிலாடுதுறை இடையே இயக்கப்படும், ஜன் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலை (எண்:12084), சிதம்பரம் வரை நீட்டிக்க வேண்டும். கோவையில் இருந்து ஆன்மிகம், கல்வி போன்ற காரணங்களுக்காக செல்லும் பயணிகளுக்கு, இந்த ரயில் மிக வசதியாக இருக்கும்.
சிதம்பரம் கோவில் செல்லும் பக்தர்கள், அண்ணாமலை பல்கலைக்கு செல்லும் மாணவர்கள் ஆகியோர் இந்த ரயிலைப் பயன்படுத்திக் கொள்வர். கடலூர், புதுச்சேரி செல்லும் பயணிகளும், சிதம்பரம் வரை ரயிலில் சென்று, அங்கிருந்து ஓரிரு மணி நேர பஸ் பயணத்தில் சென்றடைய முடியும் என்பதால், ஜன் சதாப்தி ரயிலை சிதம்பரம் வரை நீட்டிக்க வேண்டும்.
தற்போது இந்த ரயில், காலை 7:15 மணிக்கு கோவையில் இருந்து புறப்படுகிறது. இந்த புறப்பாடு நேரத்தை அரை மணி நேரம் முன்னதாக பட்டியலிட்டால், சிதம்பரம் வரை நீட்டிப்பதற்கு போதுமானதாக இருக்கும். அதேபோன்று சிதம்பரத்தில் இருந்து மதியம் 2:35க்கு புறப்படலாம்.
இக்கோரிக்கைகள் குறித்து, ஏற்கனவே, சேலம் கோட்ட மேலாளர், தென்னக ரயில்வே பொது மேலாளர், மத்திய ரயில்வே அமைச்சர் ஆகியோருக்கு மனு அளித்தும், இதுவரை சாதகமான பதில் ஏதும் பெறப்படவில்லை. எனவே, இக்கோரிக்கைகளை நிறைவேற்றித் தர வேண்டும்.
இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.