/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தி.மு.க., கூட்டணியில் வென்றஎம்.பி.,யை பார்க்கவே முடியல; முன்னாள் அமைச்சர் வேலுமணி பேச்சு

ADDED : மார் 29, 2024 12:31 AM
சூலுார்:கடந்த முறை தி.மு.க., கூட்டணியில் வென்ற எம்.பி.,யை, தொகுதியில் எங்குமே பார்க்கமுடியவில்லை, என, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வேலுமணி பேசினார்.
சூலுார் சட்டசபை தொகுதி அ.தி.மு.க., கூட்டணி செயல்வீரர்கள் கூட்டம் பாப்பம்பட்டி பிரிவில் நேற்று முன்தினம் நடந்தது. வேட்பாளரை அறிமுகம் செய்து வைத்து முன்னாள் அமைச்சர் வேலுமணி பேசியதாவது:
கடந்த முறை தி.மு.க., கூட்டணியில் வென்ற எம்.பி., யை கோவையில் எங்கும் பார்க்கவே முடியவில்லை. உயர் படிப்பு படித்துள்ள நமது வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் வெற்றி பெற்றால் கோவை மக்களின் குரலாக லோக்சபாவில் பேசுவார்.
நமது வேட்பாளருக்கு நிகரான யாரும் களத்தில் இல்லை. அ.தி.மு.க., வுக்கு துரோகம் செய்து விட்டு சென்ற நபர், தி.மு.க., கூட்டணியில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். ஆறு தொகுதியில் அவர்களுக்கு தி.மு.க., வினர் யாருமே கிடைக்கவில்லையா. நமது வேட்பாளர், 3 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
முன்னாள் அமைச்சர்கள் ராதாகிருஷ்ணன், வேலுசாமி, எம்.எல்.ஏ., கந்தசாமி மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர்.