/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'ஸ்பா' அமைத்து தருவதாக கூறி ரூ.6.5 லட்சம் மோசடி
/
'ஸ்பா' அமைத்து தருவதாக கூறி ரூ.6.5 லட்சம் மோசடி
ADDED : ஜூன் 10, 2024 01:35 AM
கோவை:'ஸ்பா' மையம் அமைத்து தருவதாகக்கூறி ரூ.6.5 லட்சம் மோசடி செய்தது தொடர்பாக சரவணம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
சேலம், தாசநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் செந்தில்குமார். கடந்த ஜன., மாதம் தனது நண்பர் வாயிலாக, கோவை கணபதியை சேர்ந்த சுரேஷ் என்பவர் அறிமுகமானார். இந்நிலையில், தான் 'ஸ்பா' மையம் நடத்திவருவதாகவும், இதில் நல்ல வருமானம் கிடைப்பதாகவும் சுரேஷ் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, கணபதியில் இம்மையம் ஆரம்பித்து தருவதாக கூறியதை அடுத்து, செந்தில்குமார் கடந்த ஜன மற்றும் மார்ச் மாதங்களில் பல பரிவர்த்தனைகளில் ரூ.6.5 லட்சம் அனுப்பியுள்ளார். அதன்பிறகு, சுரேஷ் மொபைல் போன் அழைப்பை ஏற்காது ஏமாற்றிவந்துள்ளார்.
பணத்தை திரும்ப கேட்டபோது மிரட்டலும் விடுத்துள்ளார். சரவணம்பட்டி போலீசில் செந்தில்குமார் புகார் அளிக்க விசாரணை நடந்துவருகிறது.

