/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
டி.என்.பி.எஸ்.சி., தேர்வுக்கு இலவச பயிற்சி
/
டி.என்.பி.எஸ்.சி., தேர்வுக்கு இலவச பயிற்சி
ADDED : மே 30, 2024 11:49 PM
பொள்ளாச்சி;டி.என்.பி.எஸ்.சி., குரூப் 1, குரூப் 2, குரூப் 2ஏ ஆகிய போட்டித் தேர்வுகள் விரைவில் நடைபெற இருக்கிறது. இதற்கான இலவச பயிற்சி வகுப்பு, கோவையில் ஜூன் 3ல் துவங்குகிறது.
தமிழகத்தில் துணை கலெக்டர், துணை காவல் கண்காணிப்பாளர், வணிக வரி உதவி கமிஷனர் ஆகிய பதவிகள் அடங்கிய ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு தொகுதி - 1ல் (குரூப் 1), 90 பணியிடங்கள் காலியாக இருப்பதாக, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. இதற்கான தேர்வு ஜூலை 13ல் நடைபெற இருக்கிறது.
டி.என்.பி.எஸ்.சி., ஆண்டு திட்ட நிரல் 2024ல் குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுக்கான அறிவிப்பு, உத்தேசமாக ஜூன் 28ல் வெளியிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தேர்வுகளுக்கான ஒருங்கிணைந்த இலவச பயிற்சி வகுப்பு, கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், ஜூன் 3ல் துவங்குகிறது.
அங்கீகரிக்கப்பட்ட பல்கலையில் ஏதாவது ஒரு இளங்கலை பட்டம் பெற்றவர்கள் பங்கேற்கலாம். ஆங்கிலம், தமிழ் மொழியில் பயிற்சி அளிக்கப்படும்.
ஸ்மார்ட் போர்டு, வைபை வசதி, போட்டித் தேர்வுக்கான புத்தகங்கள் அடங்கிய நுாலக வசதி இருக்கிறது. வாரத்தேர்வு, முழு மாதிரி தேர்வு நடத்தப்படும்.
https://tamilnaducareer services.tn.gov.in என்ற இணையத்தில் பதிவு செய்துஇலவசமாக பாடக்குறிப்புகளை, பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பங்கேற்க விரும்புவோர், இரண்டு பாஸ்போர்ட் சைஸ் போட்டோவுடன், ஜூன் 3 அன்று, மேட்டுப்பாளையம் ரோட்டில், கவுண்டம்பாளையத்துக்கு அருகில் உள்ள அலுவலகத்துக்கு நேரில் வர வேண்டும். அல்லது,studycirclecbe@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாக தொடர்பு கொள்ளலாம் என, கோவை கலெக்டர் கிராந்திகுமார் தெரிவித்துள்ளார்.