/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'தினமலர் - வழிகாட்டி'யில் அப்ளிகேஷன் முதல் அட்மிஷன் வரை! கல்லுாரி, கல்லுாரியாக அலைய விடாமல் ஓரிடத்தில் தீர்வு

ADDED : மார் 25, 2024 01:28 AM

கோவை:பிளஸ்2 படிப்புக்குப் பின், உயர்கல்வி சார்ந்த பல்வேறு குழப்பங்களுக்கு தீர்வு கொடுக்கும், 'தினமலர் - வழிகாட்டி' நிகழ்ச்சி, இரண்டாம் நாளாக நேற்று, கோவை கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் நடந்தது.
விடுமுறை நாளான நேற்று, மாணவர்கள், பெற்றோர் அலைகடல் என திரண்டு வந்து, அனைத்து கல்லுாரி அரங்குகளையும் பார்வையிட்டனர். அப்ளிகேஷன் முதல் அட்மிஷன் வரை முழுமையாக தகவல்களை, அந்தந்த கல்லுாரி பிரதிநிதிகளிடம் கேட்டு தெளிவு பெற்றனர்.
கருத்தரங்கு அமர்வின் காலை பொழுதில், சி.ஏ., படிப்புகளின் எதிர்காலம் குறித்து, ஐ.சி.ஏ.ஐ., நிபுணர் ராஜேந்திரகுமார், பாதுகாப்பு சார்ந்த துறைகளில் வாய்ப்புகள் குறித்து, எஸ்.எல்.சி.எஸ்., பேராசிரியர் விவேக் ராம்குமார், வேலைவாய்ப்புக்கான திறன்கள் குறித்து, ஜோஹோ நிறுவன அதிகாரி சார்லஸ் காட்வின் பேசினர்.
மாலை அமர்வில் கேரியர் கவுன்சிலிங் குறித்து கல்வியாளர் அஸ்வின், வேளாண் படிப்புகளும் தகுதிகளும் குறித்து, தமிழ்நாடு வேளாண் பல்கலை துணைவேந்தர் கீதாலட்சுமி, மெரைன் கேட்டரிங் அண்டு ஹோட்டல் மேனேஜ்மென்ட் குறித்து, எஸ்.எல்.சி.எஸ்., பேராசிரியர் சுரேஷ்குமார் ஆலோசனைகளை வழங்கினர்.
தொடர்ந்து மாணவர்களும், பெற்றோரும் சந்தேகங்களை வல்லுநர்களிடம் நேரடியாக கேட்டு விளக்கம் பெற்றனர்.
இந்நிகழ்ச்சி இன்றே கடைசி. உங்கள் பிள்ளைகளின் பிரகாசமான எதிர்காலத்துக்கு வழிகாட்டும் இந்த அரிய வாய்ப்பை, தவற விடாதீர் பெற்றோரே!