/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விநாயகர் சதுர்த்தி விழா இ.மு., ஆலோசனை
/
விநாயகர் சதுர்த்தி விழா இ.மு., ஆலோசனை
ADDED : ஆக 25, 2024 10:46 PM
தொண்டாமுத்தூர்:தொண்டாமுத்தூர், பேரூர், ஆலாந்துறை ஒன்றிய ஹிந்து முன்னணி சார்பில், விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனை கூட்டம், தொம்பிலிபாளையம் நாகசக்தி அம்மன் கோவில் மண்டபத்தில் நேற்று நடந்தது.
மாவட்ட தலைவர் தசரதன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ரமேஷ் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில், வரும், செப்.,7ம் தேதி, தொண்டாமுத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில், 108க்கும் மேற்பட்ட இடங்களில், சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத வகையில், கிழங்கு மாவு, காகித கூழ் உள்ளிட்ட இயற்கை பொருட்களால் தயாரிக்கப்பட்ட, விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்வது, அனைத்து இடங்களிலும் கணபதி ஹோமம், அன்னதானம் மற்றும் திருவிளக்கு பூஜை நடத்துவது, 8ம் தேதி அனைத்து இடங்களிலும் செண்டை மேளம் முழங்க, திருவீதி உலா நடத்துவது, 9ம் தேதி, மாலை, 5:00 மணிக்கு, பூலுவபட்டியில் விநாயகர் சதுர்த்தி விசர்ஜன விழா பொதுக்கூட்டம் நடத்தி, சாடிவயலில் சிலை கரைப்பது என முடிவெடுக்கப்பட்டது.
இக்கூட்டத்தில், மாநில நிர்வாக குழு உறுப்பினர் சதீஷ், கோவை கோட்ட செயலாளர் கிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

