/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சங்கனுார் பள்ளத்தின் கரையில் குப்பை: தகவல் அறிந்ததும் மாநகராட்சி 'ஆக் ஷன்'
/
சங்கனுார் பள்ளத்தின் கரையில் குப்பை: தகவல் அறிந்ததும் மாநகராட்சி 'ஆக் ஷன்'
சங்கனுார் பள்ளத்தின் கரையில் குப்பை: தகவல் அறிந்ததும் மாநகராட்சி 'ஆக் ஷன்'
சங்கனுார் பள்ளத்தின் கரையில் குப்பை: தகவல் அறிந்ததும் மாநகராட்சி 'ஆக் ஷன்'
ADDED : மார் 06, 2025 12:24 AM

கோவை:
கோவை, 64வது வார்டு கிருஷ்ணசாமி நகர், ஆட்டோ காலனியில், சங்கனுார் பள்ளத்தின் கரையில் பரவிக்கிடந்த குப்பை குவியலால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டது. மாநகராட்சி கமிஷனரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டதும், இரண்டு மணி நேரத்தில் அகற்றி, சுத்தம் செய்யப்பட்டது.
கோவை மாநகர பகுதியில், குப்பையை பொதுமக்களே பிரித்துக் கொடுக்கும் பழக்கத்தை உருவாக்க, வீதிகளில் வைக்கப்பட்டிருந்த தொட்டிகள் அகற்றப்பட்டு விட்டன. நகர பகுதியில் குப்பை தொட்டிகளே இல்லை.
இச்சூழலில், 64வது வார்டு கிருஷ்ணசாமி நகர் அருகே ஆட்டோ காலனியை கடந்து சங்கனுார் பள்ளம் என்கிற ஓடை செல்கிறது.
இந்த ஓடை சிங்காநல்லுார் குளத்தை சென்றடைகிறது. ஓடையின் கரைகளை தொட்டவாறு, ஏராளமான குடியிருப்புகள் உள்ளன.
அப்பகுதிகளை சேர்ந்தவர்கள், வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் உருவாகும் குப்பை, இறைச்சி கழிவுகள், ஓட்டல் கழிவுகள், அன்றாட குப்பைகள் மற்றும் பழைய மெத்தை, தலையணை, உணவு கழிவுகள் உள்ளிட்ட அனைத்து கழிவுகளையும் கொட்டுகின்றனர். இதனால், அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. அப்பகுதியில் வசிப்பவர்கள், ஜன்னலை திறந்தால் துர்நாற்றம் வீசுகிறது.
இத்தகவல், மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதனையடுத்து, சுகாதாரப் பிரிவினர், கழிவுகளை இரண்டு மணி நேரத்தில் அகற்றினர்.
சங்கனுார் பள்ளத்தின் கரையை சுத்தம் செய்து, பூங்கா அமைத்துக் கொடுத்தால், அப்பகுதியை சேர்ந்தவர்களுக்கும், சிறுவர், சிறுமியருக்கும் பயனுள்ளதாக இருக்குமென, குடியிருப்போர் நலச்சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.