/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பேரூர் படித்துறையில் குப்பை அகற்றும் பணி
/
பேரூர் படித்துறையில் குப்பை அகற்றும் பணி
ADDED : ஆக 06, 2024 07:06 AM
தொண்டாமுத்தூர்: பேரூர் படித்துறை நொய்யல் ஆற்றில், ஆடி அமாவாசை முன்னிட்டு, தர்ப்பணம் கொடுக்க வந்த பொதுமக்கள் விட்டுச் சென்ற பிளாஸ்டிக் குப்பையை, தன்னார்வலர்கள் அகற்றி சுத்தம் செய்தனர்.
வழிபாட்டிற்கு வந்த பொதுமக்கள், பூ, பழங்களை பிளாஸ்டிக் கவர்களில் கொண்டு வந்திருந்தனர். வழிபாட்டிற்குப்பின், அந்த பிளாஸ்டிக் குப்பையை, ஆற்றிலும், கரைகளிலும் விட்டு சென்றனர். இந்நிலையில், கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு, பி.எஸ்.ஜி., பாராமெடிக்கல் கல்லூரி மாணவர்கள், பேரூர் பேரூராட்சியின் தூய்மை பணியாளர்கள் இணைந்து, படித்துறையின் இரு கரைகளிலும் குப்பையை அகற்றினர்.
பேரூராட்சி வாகனத்தின் மூலம் கொண்டு சென்று அப்புறப்படுத்தினர்.
அதோடு, ஆற்றில் நீர்வரத்து அதிகமாக இருந்ததால், பொதுமக்கள் பிண்டங்களை கரைக்க ஆற்றுக்குள் இறங்குவதையும் தடுத்து பாதுகாத்தனர்.