/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தீயதை விலக்கு... வாழ்வில் வரும் ஒளி விளக்கு!
/
தீயதை விலக்கு... வாழ்வில் வரும் ஒளி விளக்கு!
ADDED : ஜூன் 09, 2024 12:26 AM

திறமைக்கு தீனி போடும் நிகழ்ச்சி, டி.கே.துரைசாமி கல்வி மையம் சார்பில், ஆர்த்ரா ஹாலில் நடந்தது. இதில், தமிழர் மெய்யியல் ஆய்வாளர் லட்சுமி காந்தன் பேசியதாவது:
உழைப்பை மறந்து, எதுவும் நம் கைகளில் எளிதாக கிடைக்க வேண்டும் என்ற மனோபாவத்தில், வெறும் பார்வையாளர்களாக தன் வாழ்க்கையை கழித்து கொண்டிருக்கின்றனர் பலர்.
பண்பாடு, கலாசாரம் அனைத்தையும் மறந்து, மேற்கத்திய மனோபாவத்தில் சிக்கி, மொபைல் போன் வெளிச்சத்தில், வாழ்க்கையை தேடிக்கொண்டிருப்பவர்களின் எண்ணிக்கை அதிகம்.
நான் கஷ்டப்பட்டாலும், என்னுடைய குழந்தைகள் கஷ்டப்படக்கூடாது என்று, வாழ்க்கையின் அருமையை சொல்லி வளர்க்காத பெற்றோர் கூட, இதற்கு ஒரு வகையில் காரணம்.
இநத சூழல் மாற வேண்டுமானால், பெற்றோர், வீட்டில் இருக்கிற ஆசிரியர்களாக மாற வேண்டும். ஆசிரியர்கள், பள்ளியில் இருக்கிற பெற்றோராக மாற வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
பேராசிரியர் அனந்த பார்த்திபன் பேசுகையில், ''நமது எண்ணங்களுக்கு ஏற்பவே வாழ்க்கை அமைந்து விடுகிறது. வாழ்வில் வெற்றி பெற விரும்பும் அனைவரும், எதையும் தாங்கும் இதயத்தோடு, தனக்கான இலக்கை முன்கூட்டியே முடிவெடுத்து, அதை நல்ல எண்ணங்களோடு செயல்படுத்தினால், நிச்சயம் இந்த பிரபஞ்ச சக்தி, நம் முன்னேற்றத்துக்கு துணை நிற்கும்.
துன்பங்களும், துயரங்களும் ஒரு போதும் நிரந்தரமில்லை.
''இலக்கு நிர்ணயித்து, அதை நித்தமும் சிந்தித்து, அதன் பாதையில் பயணித்தால், ஒரு நாள், நிச்சயம் வெற்றி உங்களை சொந்தம் கொண்டாடும்,'' என்றார்.