/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'எனக்கு பாதுகாப்பு தர வேண்டும்'
/
'எனக்கு பாதுகாப்பு தர வேண்டும்'
ADDED : ஏப் 30, 2024 11:51 PM
கோவை:உயிருக்கு ஆபத்து இருப்பதால், பாதுகாப்பு வழங்க வேண்டும் என, பாட்டாளி மக்கள் கட்சி(பா.ம.க.,) மாவட்ட செயலாளர் அசோக் ஸ்ரீநிதி மனு அளித்தார்.
பா.ம.க., மாவட்ட செயலாளர் அசோக் ஸ்ரீநிதி. இவர் கோவை மாநகரக போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார்.
மனுவில் அவர் கூறியுள்ளதாவது:
மைவீ3 ஆட்ஸ் எனும் நிறுவனம், பல ஆயிரம் பேரிடம் இருந்து ரூ.2,000 கோடி வரை மோசடி செய்துள்ளது குறித்து புகார் தெரிவித்துள்ளேன். போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் எனது மொபைல்போனுக்கு கடந்த, 27ம் தேதி அழைப்பு வந்தது.
அதில் பேசிய நபர், மைவீ3 ஆட்ஸ்க்கு எதிராக செயலப்பட்டால் உயிரோடு இருக்க மாட்டாய் என மிரட்டினார். விசாரணையில், அந்த மொபைல்போன் எண் மைவீ3 ஆட்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமானது எனத் தெரியவந்துள்து. எனவே என் உயிருக்கு ஆபத்து இருப்பதால், பாதுகாப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.