/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தங்க பதக்கம் வென்ற பார்க் கல்லுாரி மாணவர்
/
தங்க பதக்கம் வென்ற பார்க் கல்லுாரி மாணவர்
ADDED : ஜூன் 24, 2024 12:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை;கணியூரில் செயல்பட்டு வரும், பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி மாணவர், 2023ம் ஆண்டிற்கான அண்ணா பல்கலையின் தங்கப் பதக்கத்தை வென்று சாதித்துள்ளார்.
கல்லுாரியில் ரோபோட்டிக்ஸ் மற்றும் ஆட்டோமேஷன் பொறியியல் துறையில், இளங்கலை படித்த மாணவர் ஆசிப் அலி, துறை தேர்வில் அண்ணா பல்கலையளவில் முதலிடம் பெற்று, தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.
பார்க் கல்வி குழுமத்தின் முதன்மை செயல் அலுவலர் அனுஷா, மாணவர் ஆசிப் அலி மற்றும் துறை பேராசிரியர்கள் அனைவரையும் பாராட்டினார்.