/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசு கலை அறிவியல் கல்லுாரி ஆண்டு விழா
/
அரசு கலை அறிவியல் கல்லுாரி ஆண்டு விழா
ADDED : ஏப் 30, 2024 11:46 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொண்டாமுத்தூர்:தொண்டாமுத்தூர் அரசு கலை அறிவியல் கல்லூரியில், ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.
விழாவில், பேராசிரியர் பிருந்தா வரவேற்பு உரையாற்றினார். கல்லூரி முதல்வர் சக்தி ஸ்ரீ தலைமை வகித்து, ஆண்டு அறிக்கை வாசித்தார். இதில், மார்ட்டின் குழு நிறுவனங்களின் இயக்குனர் லீமாரோஸ் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளையும், கல்லூரியில் நடந்த வேலை வாய்ப்பு முகாமில் தேர்வானவர்களுக்கு, பணி ஆணையையும் வழங்கினார். பேராசிரியர் ரமேஷ் நன்றியுரையாற்றினார். பேராசிரியர்கள், மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.