/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசு உயர்நிலைப்பள்ளி ஆறாவது முறையாக சென்டம்
/
அரசு உயர்நிலைப்பள்ளி ஆறாவது முறையாக சென்டம்
ADDED : மே 16, 2024 11:01 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சூலுார்;சூலுார் அடுத்த காடம்பாடியில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. பத்தாம் வகுப்பு தேர்வில் தொடர்ந்து ஆறாவது முறையாக 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.
மாணவர் துசேந்தர் 483, சத்யா 454, புவனேஸ்வரி 454, கோகுல் -445 மதிப்பெண்கள் பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு பள்ளி தலைமையாசிரியர் கிருஷ்ணமணி மற்றும் ஆசிரிய,ஆசிரியைகள் பாராட்டு தெரிவித்தனர்.
ஊராட்சி தலைவர் இந்திராணி தங்கராஜ் மற்றும் உறுப்பினர்கள் மாணவர்களுக்கு கேடயங்களை வழங்கி பாராட்டினர். ஆசிரியர்களை கவுரவப்படுத்தினர்.