/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஸ்ரீ ராமகிருஷ்ணா நர்சிங் கல்லுாரியில் பட்டமளிப்பு
/
ஸ்ரீ ராமகிருஷ்ணா நர்சிங் கல்லுாரியில் பட்டமளிப்பு
ADDED : ஆக 27, 2024 12:34 AM

கோவை;நவஇந்தியா, ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லுாரியின், 35வது பட்டமளிப்பு விழா, எஸ்.என்.ஆர்., அரங்கில் நடந்தது. எஸ்.என்.ஆர்., சன்ஸ் அறக்கட்டளையின் இணை நிர்வாக அறங்காவலர் சுந்தர் விழாவிற்கு தலைமை வகித்தார்.
டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை துணைவேந்தர் டாக்டர் நாராயணசாமி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். 179 இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கு, பட்டப்படிப்பு சான்றிதழ் வழங்கப்பட்டது.
இளங்கலை பட்டப்படிப்பில், சிறந்த மாணவருக்கான தங்கப்பதக்கம் கீர்த்தனா, யுவதர்ஷினி ஆகியோருக்கும், முதுகலை பட்டப்படிப்பில் சிறந்த மாணவருக்கான தங்கப்பதக்கம் நிவேதப்ரியா மற்றும் ஆலிஸ் சில்வியா ஆகியோருக்கும் வழங்கப்பட்டது.
எஸ்.என்.ஆர்., சன்ஸ் அறக்கட்டளை தலைமை நிர்வாக அதிகாரி ராம்குமார், மருத்துவ இயக்குனர் ராஜகோபால், மருத்துவ கண்காணிப்பாளர் அழகப்பன், ராமகிருஷ்ணா செவிலியர் கல்லுாரியின் முதல்வர் டாக்டர் நிர்மலா, துணை முதல்வர் கிரிஜா குமாரி மற்றும் ராமகிருஷ்ணா கல்லுாரிகளின் முதல்வர்கள், பேராசிரியர்கள் பங்கேற்றனர்.