/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விபத்துக்குள்ளான கார்களில் மூட்டை மூட்டையாக 'குட்கா'
/
விபத்துக்குள்ளான கார்களில் மூட்டை மூட்டையாக 'குட்கா'
விபத்துக்குள்ளான கார்களில் மூட்டை மூட்டையாக 'குட்கா'
விபத்துக்குள்ளான கார்களில் மூட்டை மூட்டையாக 'குட்கா'
ADDED : மே 25, 2024 02:27 AM

பெருமாநல்லுார்:கோவை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லுார் வழியாக நேற்று அதிகாலை சென்றுகொண்டிருந்த கர்நாடக மாநில பதிவு எண் காரின் டயர் வெடித்தது. கார் நிலை தடுமாறி டிவைடர் மீது மோதியது. காரை தொடர்ந்து வந்து கொண்டிருந்த அரசு பஸ் மீதும் கார் மோதியது. பஸ்சின் பின்னால் வந்து கொண்டிருந்த, புதுடில்லி பதிவு எண் கொண்ட கார் மீதும் மோதியது. இவ்வாறு அடுத்தடுத்து மூன்று வாகனங்கள் மோதிக் கொண்டதால், தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்ல முடியவில்லை.
அப்போது, விபத்தில் சிக்கிய கார்களில் பயணம் செய்தவர்கள் தப்பினர். பெருமாநல்லுார் போலீசார் இரு கார்களிலும் சோதனை செய்ததில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் மூட்டை மூட்டையாக இருந்தன.
இரண்டு காரில், 158 மூட்டைகளில் இருந்த, 1,024 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், காரில் வந்த நபர்கள் யார், காரின் உரிமையாளர்கள் குறித்து விசாரிக்கின்றனர்.

