/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கைத்தறி கண்காட்சி 20 சதவீதம் தள்ளுபடி
/
கைத்தறி கண்காட்சி 20 சதவீதம் தள்ளுபடி
ADDED : ஆக 09, 2024 12:46 AM
- நமது நிருபர்-
தேசிய கைத்தறி தினமான நேற்று, கைத்தறி துறை சார்பில், சிறப்பு கைத்தறித்துணி கண்காட்சி மற்றும் விற்பனை, திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்தது. கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள், கோ- ஆப்டெக்ஸ், கதர் கிராம தொழில்கள் சார்பில், கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. கலெக்டர் கிறிஸ்துராஜ், கண்காட்சி அரங்கை திறந்து, விற்பனையை துவக்கிவைத்தார்.
கைத்தறி நெசவாளர்களுக்கு நலத்திட்ட உத்தரவு மற்றும் உதவிகள் வழங்கப்பட்டன. கைத்தறி துறை உதவி இயக்குனர் கார்த்திகேயன், கதர் துறை உதவி இயக்குனர் சுரேஷ், கோ- ஆப்டெக்ஸ் மேலாளர் ஜெகநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அரசு அலுவலர்கள், பொதுமக்கள் பார்வையிட்டு, பிடித்தமான கைத்தறி ரகங்களை வாங்கிச் சென்றனர். கைத்தறி ரகங்கள் 20 சதவீதம் தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்பட்டது.