/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'வாழ்வில் லட்சியம் வேண்டும் அதற்காக உழைக்க வேண்டும்'
/
'வாழ்வில் லட்சியம் வேண்டும் அதற்காக உழைக்க வேண்டும்'
'வாழ்வில் லட்சியம் வேண்டும் அதற்காக உழைக்க வேண்டும்'
'வாழ்வில் லட்சியம் வேண்டும் அதற்காக உழைக்க வேண்டும்'
ADDED : ஜூலை 11, 2024 06:15 AM
கோவை : கோவை சரவணம்பட்டியில் உள்ள பி.பி.ஜி., கலை அறிவியல் கல்லுாரி மாணவர்களுக்கான, முதலாமாண்டு வரவேற்பு விழா நடந்தது.
விழாவிற்கு, பி.பி.ஜி., கல்வி நிறுவனங்களின் தலைவர் தங்கவேலு தலைமை வகித்தார். கல்லுாரி முதல்வர் முத்துமணி வரவேற்றார். விழாவில், கோவை துணை போலீஸ் கமிஷனர் ஸ்டாலின் பேசுகையில், கல்வி கற்பதால் மட்டுமே ஒருவர் உயர்ந்து விட முடியாது. கல்வியோடு திறனையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
பிறரோடு பேசுவதும் திறமைதான். உங்களுடைய பலம் என்ன, பலவீனம் என்ன என்பதை உணர்ந்து, செயல்பட்டால் முன்னேற முடியும். வாழ்க்கையில் லட்சியம் வேண்டும்; அதற்காக உழைக்க வேண்டும், என்றார். தமிழ் துறை தலைவர் சந்திரகலா நன்றி தெரிவித்தார்.