/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஹலோ... உங்களுக்கு ஒரு பார்சல் வந்திருக்கு!
/
ஹலோ... உங்களுக்கு ஒரு பார்சல் வந்திருக்கு!
ADDED : ஏப் 14, 2024 12:44 AM

இந்திய எல்லையில் தங்களது பெயரில் போதை பொருட்கள் வந்திருப்பதாக, போலீஸ் போல் நடித்து மக்களிடம், மர்ம நபர்கள் லட்சக்கணக்கில் பணம் பறித்து வருகின்றனர்.
இதனை தடுக்க, சைபர் கிரைம் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். தற்போது போலீசார் கார்ட்டூன் வடிவில், வீடியோ வெளியிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளனர்.
அந்த வீடியோ, 3:04 நிமிடங்கள் ஓடுகிறது. அதில் மர்ம நபர், ஒருவருக்கு போன் செய்து, சீன எல்லையில் தங்களது பெயரில் போதை பொருள் வந்திருப்பதாக மிரட்டுவதும், அதன் பின் போலீஸ் போல் ஒருவர் பேசி, பணத்தை பறிப்பதும் போன்ற கார்ட்டூன் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
சைபர் கிரைம் போலீசார் வெளியிட்டுள்ள, இந்த வீடியோவை போலீசார் அனைவருக்கும் பகிர்ந்து வருகின்றனர்.

