/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இங்கு ஏழைகள் ஆட்சி அங்கு பணக்காரர்கள் ஆட்சி!
/
இங்கு ஏழைகள் ஆட்சி அங்கு பணக்காரர்கள் ஆட்சி!
ADDED : ஏப் 09, 2024 12:35 AM

பொள்ளாச்சி லோக்சபா தொகுதி, கிணத்துக்கடவு பழைய பஸ் ஸ்டாப்பில், தி.மு.க., வேட்பாளர் ஈஸ்வரசாமியை ஆதரித்து, எம்.பி., திருச்சி சிவா பிரசாரம் செய்தார்.
அவர் பேசுகையில், கடந்த, 10 ஆண்டு பா.ஜ., ஆட்சியில், 108 முறை பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது. தற்போது, கச்சா எண்ணெய் விலை குறைந்தும் பெட்ரோல், டீசல் விலை குறையவில்லை.
இதனால், மத்திய அரசுக்கு, 7.75 லட்சம் கோடி ரூபாய் கிடைத்துள்ளது. பொதுத்துறை நிறுவனங்கள் தனியாருக்கு தாரைவார்த்ததன் வாயிலாக, 4.5 லட்சம் கோடி கிடைத்துள்ளது. இந்த பணம் எல்லாம் எங்கே போனது. விவசாயிகள் கடன் ரத்து செய்யமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏழைகளின் ஆட்சி நடக்கிறது, டில்லியில் பணக்காரர்களின் ஆட்சி நடக்கிறது. ஆனால் தமிழகத்தில், மகளிருக்கு உரிமை தொகை, மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை போன்றவைகள் இங்கு வழங்கப்படுகிறது. எனவே, தி.மு.க.,வுக்கு ஆதரவு கொடுங்க,'' என்றார்.
மக்கள் அதிருப்தி
கிணத்துக்கடவு பழைய பஸ் ஸ்டாப் பகுதியில் தி.மு.க., பிரசாரம் நடந்தது. இதனால், கிணத்துக்கடவு - கோவை செல்லும் சர்வீஸ் ரோடு அடைக்கப்பட்டு மாற்று வழியில் வாகனங்கள் இயக்கப்பட்டது.
இதனால் அரை மணி நேரத்துக்கும் மேல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. கிணத்துக்கடவு, தேரோடும் வீதி ரோட்டில் பிரசாரம் நடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், போக்குவரத்து நெரிசல் நிறைந்த பகுதியான பழைய பஸ் ஸ்டாப்பில் பிரசாரம் மேற்கொண்டது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

