sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 08, 2026 ,மாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

இந்து ஆட்டோ தொழிலாளர் முன்னணி சங்கம் ஆர்ப்பாட்டம்

/

இந்து ஆட்டோ தொழிலாளர் முன்னணி சங்கம் ஆர்ப்பாட்டம்

இந்து ஆட்டோ தொழிலாளர் முன்னணி சங்கம் ஆர்ப்பாட்டம்

இந்து ஆட்டோ தொழிலாளர் முன்னணி சங்கம் ஆர்ப்பாட்டம்


ADDED : ஆக 13, 2024 10:35 PM

Google News

ADDED : ஆக 13, 2024 10:35 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை:இந்து ஆட்டோ தொழிலாளர் முன்னணி சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவை செஞ்சிலுவைச் சங்கம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் விக்னேஷ் தலைமை வகித்தார்.

'ஓலா, ஊபர் நிறுவனங்களால், ஆட்டோ தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. அவற்றை முறைப்படுத்த வேண்டும், ஆட்டோ தொழிலாளர்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்வதை காவல்துறை கைவிட வேண்டும், மீட்டர் கட்டணத்தை உயர்த்தி அறிவிக்க வேண்டும், தி.மு.க., தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வேண்டும்' என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கோஷம் எழுப்பப்பட்டது.

மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் சதீஷ், கோட்டச் செயலாளர் பாபா கிருஷ்ணன், மாவட்ட செய்தித் தொடர்பாளர் தனபால், ஆட்டோ முன்னணி மாவட்டப் பொறுப்பாளர்கள் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us