ADDED : ஏப் 18, 2024 04:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெ.நா.பாளையம், :  பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள பாலமலை ரங்கநாதர் திருக்கோவில் சித்ரா பவுர்ணமி தேர்த்திருவிழா கொடியேற்றம் நடந்தது.
நேற்று மதியம், 12:30 மணிக்கு நடந்த கொடியேற்று விழா நிகழ்ச்சியில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று அன்ன வாகனம், நாளை அனுமந்த வாகனம், 20ம் தேதி கருட வாகனம், 21ம் தேதி செங்கோதை அம்மன் அழைப்பு, 22ம் தேதி திருக்கல்யாண உற்சவம், புஷ்ப பல்லக்கு வாகனங்களில் பெருமாள் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.
23ம் தேதி மாலை, 5:00 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடக்கிறது. 24ம் தேதி பரிவேட்டை குதிரை வாகன உற்சவம், 25ம் தேதி சேஷ வாகன உற்சவம், தெப்ப உற்சவம் நடக்கிறது.
26ம் தேதி தீர்த்தவாரி நிகழ்ச்சி நடக்கிறது.

