/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மழையில் உரங்கள் இட வேண்டாம் :தோட்டக்கலைத்துறை அறிவுறுத்தல்
/
மழையில் உரங்கள் இட வேண்டாம் :தோட்டக்கலைத்துறை அறிவுறுத்தல்
மழையில் உரங்கள் இட வேண்டாம் :தோட்டக்கலைத்துறை அறிவுறுத்தல்
மழையில் உரங்கள் இட வேண்டாம் :தோட்டக்கலைத்துறை அறிவுறுத்தல்
ADDED : மே 20, 2024 10:50 PM
சூலுார்:தொடர் மழையின் போது, உரங்கள் இடுவதையும், பூச்சி கொல்லி மருந்து தெளிப்பதையும் தவிர்க்க வேண்டும், என, தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
சூலுார் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், பயிர்களை பாதுகாக்க என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து சூலுார் வட்டார தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது;
மாவட்டத்தின் பல பகுதிகளில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. அதனால், உரங்கள் இடுதல், பூச்சி கொல்லி மருந்து தெளித்தல், களைக்கொல்லி மருந்து தெளித்தல் ஆகியவற்றை தவிர்த்திட வேண்டும்.
செடிகளுக்கு பயிர் கழிவு மூடாக்கு ஏற்படுத்துவதன் மூலம், மழையினால் ஏற்படும் மண் அரிப்பை கட்டுப்படுத்தலாம். அனைத்து வயல்களிலும் நீர் தேங்காமல் இருக்க உரிய வடிகால் வசதியை ஏற்படுத்த வேண்டும். பண்ணை குட்டை அமைத்து மழை நீரினை சேகரித்து, தேவைப்படும்போது, பாசனத்துக்கு பயன்படுத்தலாம்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.

