/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தர்பூசணி கொள்முதல் செய்த தோட்டக்கலை துறை தினமலர் செய்தி எதிரொலி
/
தர்பூசணி கொள்முதல் செய்த தோட்டக்கலை துறை தினமலர் செய்தி எதிரொலி
தர்பூசணி கொள்முதல் செய்த தோட்டக்கலை துறை தினமலர் செய்தி எதிரொலி
தர்பூசணி கொள்முதல் செய்த தோட்டக்கலை துறை தினமலர் செய்தி எதிரொலி
ADDED : பிப் 24, 2025 10:54 PM
அன்னுார்,; தர்பூசணிக்கு கட்டுபடியாகும் விலை கிடைக்காதது குறித்து வெளியான தினமலர் செய்தி எதிரொலியாக தோட்டக்கலை துறை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுத்தது.
அன்னுார் வட்டாரத்தில் கடந்த சில மாதங்களாக நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்ததால் பலர் தர்பூசணி பயிரிட்டுள்ளனர். 70 நாள் பயிரான தர்பூசணியை கொள்முதல் செய்யத் தோட்டத்துக்கு வந்த வியாபாரிகள் கிலோ ஏழு ரூபாய்க்கு கேட்டனர்.
வெளிச்சந்தையில் கிலோ 30 ரூபாய்க்கு விற்கும் நிலையில், 7 ரூபாய்க்கு கேட்டதால் அதிர்ச்சிக்குள்ளாகினர்.
ஒரு சில விவசாயிகள் நேரடியாக சாலையோரத்தில் கடை அமைத்து விற்பனையை துவக்கினர்.
இந்த செய்தி படத்துடன் நேற்றைய 'தினமலர்' நாளிதழில் வெளியானது. உடனே அன்னுார் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் கோமதி, உதவி வேளாண் அலுவலர் (வேளாண் வணிகம்) வினோத் ஆகியோர் சம்பந்தப்பட்ட விவசாயி முருகசாமி கடைக்கு சென்று விசாரித்தனர்.
இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், 'விவசாயி முருகசாமி, வாழையில் ஊடுபயிராக தர்பூசணி பயிரிட்டுள்ளார். ஒரு ஏக்கருக்கு 12 டன் மகசூல் பெற்றுள்ளார்.
இது பாராட்டுக்கு உரியது. தற்போது பத்து டன் தர்பூசணி இவரிடம் இருப்பு உள்ளது. இந்த 10 டன் தர்பூசணியை தோட்டக்கலை துறை கிலோ 10 ரூபாய்க்கு கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது,' என்றனர். கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுத்த தோட்டக்கலைத் துறைக்கு விவசாயி முத்துசாமி நன்றி தெரிவித்தார்.

