/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சிலிண்டர் வெடித்து சேதமடைந்த வீடுகள்
/
சிலிண்டர் வெடித்து சேதமடைந்த வீடுகள்
ADDED : மார் 28, 2024 11:12 PM

பொள்ளாச்சி;பொள்ளாச்சி அருகே, பழனிக்கவுண்டனுாரில், சிலிண்டர் வெடித்து சேதமடைந்த வீடுகளை எம்.எல்.ஏ., பார்வையிட்டு பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதல் கூறினார்.
பொள்ளாச்சி அருகே, சோழனுார் ஊராட்சிக்கு உட்பட்ட பழனிக்கவுண்டனுாரில், கந்தசாமி, கலைக்குமார் ஆகியோருக்கு சொந்தமான வீடுகள் உள்ளன. நேற்று எதிர்பாராதவிதமாக, சமையல் காஸ் சிலிண்டர் வெடித்ததால், வீடு மற்றும் பொருட்கள் முற்றிலும் எரிந்து சாம்பலாகின.
தகவல் அறிந்த தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினர், அங்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.இந்நிலையில், தீ விபத்தில் சேதமடைந்த வீடுகளை பார்வையிட்ட எம்.எல்.ஏ., பொள்ளாச்சி ஜெயராமன், பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதல் கூறினார். தொடர்ந்து, அதிகாரிகளிடம் பேசி, உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும், என, கூறினார்.

