/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மருத்துவமனையில் பாதுகாப்பு எப்படியிருக்கு? சப்-கலெக்டர் ஆய்வு செய்து அறிவுரை
/
மருத்துவமனையில் பாதுகாப்பு எப்படியிருக்கு? சப்-கலெக்டர் ஆய்வு செய்து அறிவுரை
மருத்துவமனையில் பாதுகாப்பு எப்படியிருக்கு? சப்-கலெக்டர் ஆய்வு செய்து அறிவுரை
மருத்துவமனையில் பாதுகாப்பு எப்படியிருக்கு? சப்-கலெக்டர் ஆய்வு செய்து அறிவுரை
ADDED : ஆக 20, 2024 02:23 AM

பொள்ளாச்சி:பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து சப்-கலெக்டர் ஆய்வு செய்தார்.
கோல்கட்டாவில் பெண் பயிற்சி டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிரிழந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடு முழுவதும் டாக்டர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அரசு மருத்துவமனைகளில், பெண் டாக்டர்கள், நர்ஸ்கள், ஊழியர்களுக்கு மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்ய மாநில சுகாதார துறை அறிவுறுத்தியுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில், மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து சப்-கலெக்டர் கேத்ரின் சரண்யா நேற்று ஆய்வு செய்தார்.
மருத்துவமனை அதிகாரிகளுடன், மருத்துவமனையில் பணிபுரியும் பெண் டாக்டர்கள், நர்ஸ்கள், உதவியாளர்கள், பெண் பாதுகாவலர்கள் உள்ளிட்டோர் எண்ணிக்கை குறித்து கேட்டறிந்தார். மேலும், காலிப்பணியிடங்கள், அதை நிரப்ப மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து விவாதித்தார்.
தொடர்ந்து மருத்துவமனையில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள், அவற்றை கண்காணிப்பது குறித்து ஆய்வு செய்தார். மருத்துவமனையில் காய்ச்சல் வார்டில் ஆய்வு மேற்கொண்டார். அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் முறையாக மேற்கொள்ள மருத்துவமனை நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தினார்.
செயல்படாத கேமரா
மாநில சுகாதார துறை செயலாளர் சுப்ரியா சாஹூ மருத்துவமனைகளில் ஆய்வின் போது கவனிக்க வேண்டிய விசயங்கள் குறித்து கலெக்டர்கள், எஸ்.பி., சுகாதார துறையினருக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில், கண்காணிப்பு கேமராக்கள் செயல்பாடு, மருத்துவமனையின் நுழைவாயில்கள், பார்க்கிங், பெண்கள் பயன்படுத்தும் அறைகள், செக்யூரிட்டிகள், போலீசாரால் கண்காணிக்க வேண்டும். இருளாக உள்ள பகுதிகளில் விளக்குகள் பொருத்த வேண்டும் உள்ளிட்ட அறிவுரைகளை வழங்கியுள்ளார்.
சப்-கலெக்டர் நேற்று ஆய்வு செய்த போது, பொள்ளாச்சி அரசு மருத்துவமனையின் நுழைவாயில் கண்காணிப்பு கேமரா செயல்படாதது தெரிந்தது. அதை உடனடியாக சரிசெய்ய அறிவுறுத்தினார்.