/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தமிழில் கேட்டேன்! தந்தார்கள் ரயில் டிக்கெட்; பெற்ற பயணிகள் 'கூல் கூல்'.. எம்.பி., சொன்னது துாள் துாள்!
/
தமிழில் கேட்டேன்! தந்தார்கள் ரயில் டிக்கெட்; பெற்ற பயணிகள் 'கூல் கூல்'.. எம்.பி., சொன்னது துாள் துாள்!
தமிழில் கேட்டேன்! தந்தார்கள் ரயில் டிக்கெட்; பெற்ற பயணிகள் 'கூல் கூல்'.. எம்.பி., சொன்னது துாள் துாள்!
தமிழில் கேட்டேன்! தந்தார்கள் ரயில் டிக்கெட்; பெற்ற பயணிகள் 'கூல் கூல்'.. எம்.பி., சொன்னது துாள் துாள்!
ADDED : ஆக 03, 2024 10:08 PM

ரயில்வே ஸ்டேஷனுக்கு சென்று டிக்கெட் எடுப்பது, பெரிய சிரமமாக இருக்கிறது; ஊழியர்கள் எல்லோரும் ஹிந்தியில் பேசுவதாக, எம்.பி., கனிமொழி கூறியிருக்கிறார். இதுவரை எந்த பயணியும் இது குறித்து சொன்னதில்லையே...சரி, என்ன தான் நிஜ கள நிலவரம்? கோவை ரயில்வே ஸ்டேஷனுக்கு நேரில் சென்று, டிக்கெட் எடுத்த பயணிகள் சிலரிடம் பேசினோம். இதில், எம்.பி., கனிமொழியின் குற்றச்சாட்டு, 'சும்மா லுாலுாலுா' என்பது நிரூபணம் ஆனது!
'டிக்கெட் எடுப்பது ஈசி'
டிக்கெட் எடுக்க வந்தோம். தானியங்கி இயந்திரத்தில் டிக்கெட் எடுக்கும் வசதி உள்ளது. அதிலும், உதவிக்கு ஊழியர்கள் உள்ளனர். அவர்களிடம் தகவலையும், பணத்தையும் கொடுத்து டிக்கெட் பெற்றுக்கொண்டோம். கவுன்டரில் கூட்டம் இருந்தால், தானியங்கி இயந்திரத்தை பயன்படுத்தி, ஈஸியாக டிக்கெட் பெற்றுக்கொள்ள முடியும்.
- உஷா, திருச்சி
'ஊருக்கு மொழியில்லை'
எனது மனைவியுடன் கோவை வந்தேன். எனக்கு ஹிந்தி கொஞ்சம் பேச தெரியும். டிக்கெட் கேட்டு வாங்கி விட்டேன். உள்ளே தமிழ் பேசும் அலுவலரும் இருக்கிறார். ஹிந்தியில் பேசும் அலுவலரும் இருக்கிறார். ஊர் பெயரை எந்த மொழியில் சொன்னாலும் ஒன்றுதான். நான் ஜோலார்பேட்டைக்கு டிக்கெட் கேட்டேன் கொடுத்தார்கள். சிரமம் எதும் இல்லை.
- பிரகாஷ், ஜோலார்பேட்டை
'மெஷின் தந்த டிக்கெட்'
சேலம் செல்ல டிக்கெட் எடுக்க வந்தேன். கவுன்டரில் ஆறு பேர் வரிசையில் நின்று கொண்டிருந்தனர். அதனால், 'ஆட்டோமெடிக் டிக்கெட் வெண்டிங் மெஷினில்' தகவலை பதிவு செய்து, என்னுடைய மொபைல் போனில், 'ஸ்கேன்' செய்து கட்டணம் செலுத்தியதும், டிக்கெட் வந்து விட்டது. கவுன்டருக்கே போகாமல் டிக்கெட் எடுப்பது ரொம்ப 'சிம்பிள்' ஆகி விட்டது.
- வசந்த், கோவை
'தமிழில் கேட்டு பெற்றோம்'
மேல்மருவத்துார் கோவிலுக்கு போகிறோம். ஸ்டேஷனில் ஹிந்தி, ஆங்கிலம், தமிழ் என மூன்று மொழியிலும் அறிவிப்பு இருக்கிறது. பார்த்து தெரிந்து கொள்ள வசதியாக இருக்கிறது. ஏதாவது சந்தேகம் இருந்தால், தகவல் மையத்தில் கேட்டால் சரியாக சொல்கிறார்கள். தமிழில்தான் டிக்கெட் கேட்டோம். விவரங்களை கேட்டார்கள். சொன்னவுடன் டிக்கெட் கொடுத்து விட்டார்கள்.
- உமா மகேஸ்வரி, வாளையார்
'எந்த சிரமமும் இல்லை'
சகோதரியை பார்க்க கோவை வந்திருக்கிறேன். காரமடை செல்ல வேண்டும். அதற்கு டிக்கெட் எடுக்க வந்தேன். கவுன்டர் கொஞ்சம் உள்ளே இருப்பதால், அவசரமாக வந்து டிக்கெட் எடுப்பதில் சின்ன சிரமம் இருக்கிறது. அது தவிர, டிக்கெட் எடுப்பதில் எல்லாம் எந்த சிரமமும் இல்லை. டிக்கெட் எடுக்க நிற்கும் நேரத்தை விட, நடந்து வந்து செல்லும் நேரம் தான் அதிகம்.
- கணேஷ் பாபு, வேலுார்.
'மெஷினிலும் டிக்கெட்'
எந்த சிரமமும், கஷ்டமும் இல்லாமல் டிக்கெட் எடுக்க முடிகிறது. கூட்டமும் பெரியதாக இல்லை. கவுன்டரில் கூட்டமாக இருந்தால், தானியங்கி டிக்கெட் விற்பனை இயந்திரங்கள் பயன்படுத்திக்கூட சுலபமாக டிக்கெட் எடுத்துக்கொள்ளலாம். 10 ஆண்டுக்கு முன்னர் எல்லாம் பெரிய வரிசையில் நிற்க வேண்டிய கட்டாயம் இருந்தது.
- ஜென்சி, கோவை
'மொழி பிரச்னை இல்லை'
கவுன்டரில் இருக்கிறவர்கள் நன்கு 'ரெஸ்பான்ஸ்' செய்கிறார்கள். மொழி பிரச்னை எல்லாம் எதுவும் இல்லை. தமிழ் தெரிந்தவர்தான் எனக்கு டிக்கெட் வழங்கினார். நான் திருச்சி செல்கிறேன். டிக்கெட் எடுத்து விட்டேன். ரயிலுக்காக 'வெயிட்' பண்ணிக்கொண்டிருக்கிறேன்.
- எப்சி, கோவை
'தமிழில்தான் பேசினார்'
நான் மொரப்பூர் செல்ல டிக்கெட் எடுக்க வந்தேன். ஹிந்தி பேசும் அலுவலர் தான் உள்ளே இருந்தார். ஆனால் அவர், நான் சொல்வதை புரிந்துகொண்டு, சரியானடிக்கெட்டையும் அளித்தார். எந்த பிரச்னையும் இல்லை. ஈஸியாகதான் இருக்கிறது.
- மதியழகன், கோவை
'தமிழ் தெரிந்தவர்கள்'
சேலம் செல்ல கவுன்டரில் விசாரித்து டிக்கெட் எடுத்தேன். எனக்கு தமிழ் மட்டும் தான் தெரியும். கவுன்டரிலும் தமிழ் தெரிந்தவர்கள் உள்ளனர். அவர்களிடம் சொன்னதும் டிக்கெட் கொடுத்து, பிளாட்பார்ம் எண்ணையும் தெரிவித்தார்கள். இது போல் பல ரயில்வே ஸ்டேஷனில் டிக்கெட் பெற்றுள்ளேன். இதுவரை எந்த பிரச்னையும் கிடையாது.
- ராமசந்திரன், சேலம்.
'கேட்டேன்; தந்தார்கள்'
சேலத்திற்கு செல்ல ரயில்நிலைய டிக்கெட் கவுன்டரில் தான், 'ஓபன்' டிக்கெட் எடுத்தேன். 'சேலத்திற்கு ரெண்டு டிக்கெட் தாங்க' என்று சொன்னேன்; கொடுத்தார்கள். அவ்வளவுதான். இதில் எனக்கு எந்த சிரமமும் இல்லை. ஆனால், வேலை நடக்கிறது. அது போதுமே.
- திவாகர், சேலம்