/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
திறமை காண்பித்தால் வேலை; அதுக்கும் உதவும் விளையாட்டு
/
திறமை காண்பித்தால் வேலை; அதுக்கும் உதவும் விளையாட்டு
திறமை காண்பித்தால் வேலை; அதுக்கும் உதவும் விளையாட்டு
திறமை காண்பித்தால் வேலை; அதுக்கும் உதவும் விளையாட்டு
ADDED : ஆக 28, 2024 11:34 PM

''விளையாட்டு துறையில் சிறப்பாக திறமையை வெளிப்படுத்தினால், அரசுத் துறையில் வேலை வாய்ப்பு பெற முடியும்,'' என்கிறார், முன்னாள் தேசிய தடகள விளையாட்டு வீரர் ஞானவேல்.
இவர் கூறியதாவது:
விளையாட்டு என்பது உடலை வளர்க்கும் கருவி. இன்றைய நவீன யுகத்தில், குழந்தைகளுக்கு விளையாட்டு என்பது கட்டாயம்.
சிறு வயதில் இருந்தே அவர்களை விளையாட்டில் தயார்படுத்த வேண்டும். வெற்றி என்பது ஒரு நாளில் கிடைத்து விடாது. அதற்கு என்று, பயிற்சியும், முயற்சியும் வேண்டும். பள்ளியில் துவங்கி, கல்லுாரியில் தொடர்ந்து, மாவட்ட, மாநில, தேசிய, சர்வதேச போட்டிகளில் சாதிக்கும் போது, நமக்கு என்று ஒரு அடையாளம் இருக்கும்.
விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்க, மத்திய, மாநில அரசுகளின் சார்பில், பணி வழங்கி, அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்குகிறது. இதை வளரும் விளையாட்டு வீரர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
இவர், கோவை மாநகர் மின்பகிர்மான வட்டத்தில், உதவி நிர்வாக அலுவலராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

