ADDED : மே 13, 2024 11:40 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கருமத்தம்பட்டி:பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுப்பவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படும் என, கிட்டாம்பாளையம் ஊராட்சியில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, பிளஸ் 2வில், 580 மதிப்பெண்கள் பெற்ற தனியார் பள்ளி மாணவன் சரண், 516 மதிப்பெண்கள் பெற்ற அரசு பள்ளி மாணவன் சதீஷ் ஆகியோருக்கு, தலா, 10 ஆயிரம் ரூபாயை ஊராட்சி தலைவர் சந்திரசேகர் வழங்கினார்.
பத்தாம் வகுப்பில், 480 மதிப்பெண்கள் பெற்ற சதீஷ், 473 மதிப்பெண்கள் பெற்ற மாணவி ஜெர்லின் ஆகியோருக்கு, தெக்கலூர் ரோட்டரி சங்க தலைவர் ஆறுமுகம், செல்வராஜ் ஆகியோர் தலா, 5 ஆயிரம் ரூபாய் வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.

