/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு ஊக்கப்பரிசு
/
அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு ஊக்கப்பரிசு
ADDED : ஜூன் 11, 2024 12:00 AM

சூலூர்;அரசூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு ஊக்கப்பரிசு வழங்கப்பட்டது.
சூலூர் அடுத்த அரசூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஊக்கப்பரிசு வழங்கப்பட்டது.
பள்ளியின் முன்னாள் மாணவரும் ராணுவத்தில் லெப்டினன்ட் கர்னலாக உள்ள வேணுகோபால் மாணவ, மாணவியருக்கு ஊக்கப்பரிசுகளை வழங்கி பாராட்டினார். சென்டம் பெற்ற மாணவர்கள், அதற்கு காரணமான ஆசிரியர்களும் கவுரவிக்கபட்டனர். காளியப்ப செட்டியார் அறக்கட்டளை சார்பிலும் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. பள்ளி தலைமையாசிரியர் கண்ணன், ஊராட்சி தலைவர் மனோன்மணி மற்றும் முன்னாள் மாணவர்கள் பலர் பங்கேற்றனர்.

