/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரசாயன உரம், ஹைப்ரிட் விதை பயன்பாடு அதிகரிப்பு
/
ரசாயன உரம், ஹைப்ரிட் விதை பயன்பாடு அதிகரிப்பு
ADDED : பிப் 21, 2025 11:00 PM
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு வட்டாரத்தில் ஹைப்ரிட் விதைகள் மற்றும் ரசாயன உர பயன்பாடு அதிகரித்துள்ளது.
கிணத்துக்கடவு மற்றும் சுற்று வட்டாரத்தில், விவசாயம் சார்ந்த பகுதிகள் அதிகம் உள்ளது. இதில், தென்னை, வாழை, தக்காளி, பயறு வகைகள், பழ வகை மரங்கள், கிழங்கு போன்றவைகள் சாகுபடி செய்யப்படுகிறது.
பெரும்பாலான விவசாயிகள் தங்கள் நிலத்தில், ஹைப்ரிட் விதை மற்றும் ரசாயன உரங்களை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் பயிர் விரைவில் பயிர் சாகுபடி செய்யப்படுகிறது. மூன்று மாதங்களில் விளையும் குறுகிய கால பயிர் கூட இரண்டு மாதத்தில் சாகுபடியாகிறது.
மண்ணில் ஹைப்ரிட் விதைகள் நடவு செய்யும் போதும், பயிர் வளர்ச்சியின் போது விளைச்சல் அதிகம் பெற வேண்டும் என, அதிகளவு ரசாயன உரங்களை பயன்படுத்தி வருகின்றனர். இதனால், விரைவில் பயிர் அறுவடை செய்யப்படுவதுடன், காய்களில் போதிய அளவு சத்துக்கள் இன்றி உள்ளது. மேலும், ரசாயன உரத்தால் மண்ணில் உள்ள நுண் சத்துக்களின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. இதை தடுக்க வேளாண், தோட்டக்கலை துறை மற்றும் தனியார் அமைப்புகள் சார்பில் பல்வேறு வகையில் விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், விவசாயிகள் இதை பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை.
விரைவில் பயிர் சாகுபடி செய்து லாபம் ஈட்ட வேண்டும் என்ற வியாபார நோக்கில், ஏராளமான விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
எனவே, ரசாயன உரம் மற்றும் ஹைப்ரிட் விதைகள் பயன்பாட்டை கட்டுப்படுத்த அரசு சார்பில் விவசாயிகளுக்கு சிறப்பு திட்டங்கள் கொண்டு வந்து, விழிப்புணர்வு ஏற்படுத்தி இயற்கை விவசாயத்தை பாதுகாக்க வேண்டும்.