/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரிப்பு
/
வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரிப்பு
ADDED : மார் 29, 2024 12:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டுப்பாளையம்;கோவை மாவட்டம் காரமடை வனச்சரகத்திற்குட்பட்ட வெள்ளியங்காடு - மஞ்சூர் சாலையில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
இதையடுத்து வனத்துறையினர் 2 குழுக்கள் வாயிலாக சுழற்சி முறையில், 24 மணி நேரமும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் இச்சாலையில் செல்லும் உள்ளூர் மக்கள் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. வனவிலங்குகளை கண்டால் வாகன ஓட்டிகள் எந்த தொந்தரவும் செய்யக்கூடாது' என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.

