/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தொண்டாமுத்துார் வரிவசூலில் 'டாப்' ஆய்வுக் கூட்டத்தில் தகவல்
/
தொண்டாமுத்துார் வரிவசூலில் 'டாப்' ஆய்வுக் கூட்டத்தில் தகவல்
தொண்டாமுத்துார் வரிவசூலில் 'டாப்' ஆய்வுக் கூட்டத்தில் தகவல்
தொண்டாமுத்துார் வரிவசூலில் 'டாப்' ஆய்வுக் கூட்டத்தில் தகவல்
ADDED : மார் 11, 2025 11:35 PM
அன்னுார்; கோவை மாவட்டத்தில், 12 ஊராட்சி ஒன்றியங்களில், 228 ஊராட்சிகளிலும், சொத்து வரி, தொழில் வரி, தொழில் உரிம கட்டணம், குடிநீர் கட்டணம் உள்ளிட்ட அனைத்து வரியினங்கள் வசூல் தீவிர படுத்தப்பட்டுள்ளது. இதற்காக சிறப்பு முகாம்கள் ஒவ்வொரு கிராமத்திலும் நடத்தப்படுகிறது.
வரிவசூல் தொடர்பான ஆய்வுக் கூட்டம் காணொலி வாயிலாக நடந்தது. இதில் ஊராட்சிகளின் உதவி இயக்குனர் கமலக்கண்ணன் பேசுகையில், ''12 ஒன்றியங்களில் வரி வசூலில் தொண்டாமுத்துார் ஒன்றியம் முதலிடத்தில் உள்ளது. காரமடை ஒன்றியம் கடைசி இடத்தில் உள்ளது. பல ஊராட்சிகள், 50 சதவீதத்திற்கும் குறைவாகவே வரி வசூல் செய்துள்ளன. அந்த ஊராட்சி நிர்வாகங்களுக்கு நோட்டீஸ் தரப்படும். உரிய விளக்கம் தர வேண்டும். சென்னைக்கு செல்ல வேண்டி வரும். பலரும் மிக அலட்சியமாக இருக்கின்றனர். வேகப்படுத்த வேண்டும். விரைவில் 80 சதவீத இலக்கை எட்டி தகவல் தெரிவிக்க வேண்டும். வளர்ச்சிப் பணிகள் குறித்து தினசரி அறிக்கை தர வேண்டும்,'' என்றார்.
மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி செயலர்கள் பதிலளிக்கையில் வரிவசூலை வேகப்படுத்துவதாகவும் விரைவில் இலக்கை எட்டுவதாகவும் உறுதியளித்தனர்.