/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பவானி அணையில் மண் எடுக்கும் நேரத்தை நீட்டிக்க வலியுறுத்தல்
/
பவானி அணையில் மண் எடுக்கும் நேரத்தை நீட்டிக்க வலியுறுத்தல்
பவானி அணையில் மண் எடுக்கும் நேரத்தை நீட்டிக்க வலியுறுத்தல்
பவானி அணையில் மண் எடுக்கும் நேரத்தை நீட்டிக்க வலியுறுத்தல்
ADDED : ஜூன் 25, 2024 02:09 AM
கோவை;பவானி அணையிலிருந்து விவசாயிகள் வண்டல் மண் எடுக்கும் காலநேரத்தை நீட்டிப்பு செய்வதோடு, வழித்தடங் களில் சில மாற்றங்களை செய்து விவசாயிகளுக்கு உதவ வேண்டும் என்று பவானி ஆற்றுநீர் பாசன விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
பவானி ஆற்றுநீர் பாசன விவசாயிகள் சங்க தலைவர் துரைசாமி தலைமையில் வந்த விவசாயிகள் கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
பவானி அணை நீர் பிடிப்பு பகுதிகளில் வண்டல் மண் எடுக்க காலை 8:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அந்த இடத்துக்கு செல்ல வனத்துறை வழியாக செல்ல வேண்டி இருப்பதால் குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே அனுமதி அளிக்கின்றனர். அதன்படி, காலை 9:00 மணி முதல் மாலை 3:00 மணி வரை மட்டுமே எடுப்பதற்கு வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது.
வனத்துறை விதித்த கட்டுப்பாடு காரணமாக விவசாயிகளுக்கு லாரி வாடகை மற்றும் மண் எடுக்கும் இயந்திரங்களுக்கு அதிக வாடகையாகிறது. இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
இந்நடைமுறையை மாற்றி அமைப்பதோடு விவசாயிகளுக்கு பயனளிக்கும் வகையில் திட்டங்கள் அமைய வேண்டும்.
இவ்வாறு கலெக்டரிடம் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.