/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சர்வதேச சிலம்ப போட்டி; வீரர்களுக்கு பாராட்டு
/
சர்வதேச சிலம்ப போட்டி; வீரர்களுக்கு பாராட்டு
ADDED : ஜூன் 07, 2024 11:25 PM

சூலுார்:சர்வதேச சிலம்ப போட்டியில் சாம்பியன் ஷிப் கோப்பை வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
யூத் கேம்ஸ் பெடரேஷன் ஆஃப் இந்தியன் சிலம்பம் மற்றும் அந்தமான் தமிழர் சங்கம் சார்பில் சர்வதேச சிலம்ப போட்டி அந்தமானில் நடந்தது. இந்தியா, இலங்கை, அந்தமான் ஆகிய நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
இதில், சூலுார் ரவுத்திரம் அகாடமியை சேர்ந்த, 13 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். ஒற்றை மற்றும் இரட்டை கம்பு, சுருள்வாள், மான் கொம்பு, வாள் வீச்சு உள்ளிட்ட பிரிவுகளில் பங்கேற்ற இந்த வீரர்கள், 10 தங்கம், ஆறு வெள்ளி பதக்கங்களை பெற்று, ஒட்டு மொத்த சாம்பியன் ஷிப் கோப்பையையும் வென்றனர்.
காடாம்பாடி பகுதியில் வீரர், வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பயிற்சியாளர் பாண்டீஸ்வரி, தலைமை பயிற்சியாளர்கள் வினோத், வெங்கடேஷ் மற்றும் பெற்றோர், பொதுமக்கள் வீரர்களுக்கு, மாலை அணிவித்து, இனிப்பு வழங்கி வாழ்த்தினர்.